அணுமின் நிலையம் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும்.! உக்ரைனிடம் ரஷ்யா வலியுறுத்தல் - Seithipunal
Seithipunal


அணுமின் நிலையம் மீதான தாக்குதலை நிறுத்த வேண்டும் என்று உக்ரைனிடம் ரஷ்யா வலியுறுத்தியுள்ளது.

ரஷ்யா மற்றும் உக்ரைனுக்கு இடையேயான போரின் தொடக்கத்திலிருந்தே உக்ரைனின் தென்கிழக்கு பகுதியில் உள்ள ஜபோரிஜியா அணு மின் நிலையப் பகுதியை ரஷ்யா தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தது.

மேலும் ரஷ்ய படைகள் அணு மின் நிலையத்தை தாக்குதல் நடத்தும் ராணுவ தளமாக மாற்றி உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் சில நாட்களுக்கு முன் ஜபோரிஜியா சுற்றியுள்ள பகுதிகளில் நடந்த தாக்குதலில் அணு உலை ஒன்று சேதம் அடைந்து மூடப்பட்டது.

இதைத்தொடர்ந்து, கதிர்வீச்சு அபாயம் இருப்பதால் அணுமின் நிலையத்தை சா்வதேச அணுசக்தி முகாம் குழு ஆய்வு செய்ய வசதியாக, அணுமின் நிலையம் மீதான குண்டுவீச்சு தாக்குதலை உக்ரைன் நிறுத்த வேண்டும் எனவும், சா்வதேச குழு உறுப்பினா்களின் பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும் எனவும் ரஷ்ய தூதா் மிகாய்ல் உல்யானோவ் வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia urges Ukraine to stop attacks on nuclear power plant


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->