இரட்டை அதிர்வில் ரஷியா திணறியது...! கம்சாட்காவில் தொடர்ச்சியான நிலநடுக்கம்...!
Russia shaken by double tremor Continuous earthquakes Kamchatka
ரஷியாவின் கம்சாட்கா தீபகற்பம் அதிர்ச்சியில் ஆழ்ந்துள்ளது. அங்கு ஒரே நாளில் தொடர்ந்து இரண்டு முறை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கம் அப்பகுதி மக்களை பதற்றத்தில் ஆழ்த்தியுள்ளது.

முதல் அதிர்வின் ரிக்டர் அளவுகோல் 6.3 ஆகவும், பின்னர் பதிவான இரண்டாவது அதிர்வு 6.1 ஆகவும் இருந்தது. திடீரென ஏற்பட்ட இந்த நில அதிர்வால் பல கட்டிடங்கள் குலுங்கி, சுவர்கள் பிளந்தன.
பயந்துபோன மக்கள் வீடுகளை விட்டு வெளியில் பாய்ந்து, திறந்த வெளிகளில் தஞ்சம் அடைந்தனர். சில இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேத விவரங்கள் குறித்து அதிகாரப்பூர்வ தகவல் இதுவரை வெளியாகவில்லை. அதிர்வுகள் மீண்டும் ஏற்படலாம் என்ற அச்சத்தால், கம்சாட்கா முழுவதும் எச்சரிக்கை நிலை அறிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Russia shaken by double tremor Continuous earthquakes Kamchatka