உக்ரைன் மீது 170 டிரோன்கள் மூலம் ரஷியா தாக்குதல்: 47 பேர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


உக்ரைனின் கார்கிவ் மீது ரஷியா வெள்ளிக்கிழமை பிற்பகுதியில் நகரின் 12 இடங்களில் டிரோன் தாக்குதல் நடத்தியதில் 47 பேர் காயமடைந்தனர். குறித்த தாக்குதலில் குடியிருப்பு கட்டிடங்கள், பொதுமக்கள் உள்கட்டமைப்பு மற்றும் வாகனங்கள் சேதமடைந்ததாக கார்கிவ் பிராந்திய ஆளுநர் ஓலே சினிஹுபோவ் தெரிவித்துள்ளார்.

அத்துடன், இரவு முழுவதும் ரஷ்யா 183 வெடிக்கும் டிரோன்களை ஏவியதாகவும், அவற்றில், 77 உக்ரேனிய பாதுகாப்புப் படையினரால் இடைமறிக்கப்பட்ட என்றும், 73 டிரோன்கள் தொலைந்து போயின என்றும், அதில், ரஷ்யா இரண்டு பாலிஸ்டிக் ஏவுகணைகளை ஏவியதாகவும் உக்ரைன் விமானப்படை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில், ரஷ்யாவின் பாதுகாப்பு அமைச்சகம் தனது வான் பாதுகாப்புப் படையினர் ஒரே இரவில் 170 உக்ரேனிய டிரோன்களை சுட்டு வீழ்த்தியதாகக் கூறியுள்ளது. அத்துடன், எட்டு க்ரூஸ் ஏவுகணைகள் மற்றும் மூன்று ஏவுகணைகளும் இடைமறிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளது.

இதனை தொடர்ந்து, "உக்ரைனில்  ஒவ்வொரு இரவும் ஒரு கொடுங்கனவாக மாறி, உயிர்களை பலிவாங்குகிறது. உக்ரைனுக்கு பலத்த வான் பாதுகாப்பு தேவை. எங்கள் அமைதியை விரும்பும் அனைத்து நாடுகளிடமிருந்தும் வலுவான மற்றும் உண்மையான முடிவுகள் தேவை" என்று இன்று உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.

இதேவேளை, கடந்த புதன்கிழமை உக்ரைன் கனிம வளங்களை அமெரிக்கா வெட்டி எடுக்க அனுமதிக்கும் ஒப்பந்தம் கையெழுத்தான நிலையில், உக்ரைனுக்கு ராணுவ உதவிகளை அமெரிக்கா மேலும் வழங்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ரஷியாவின் தாக்குதல் நிகழ்ந்துள்ளது குறிப்பிடத்தக்கது.       


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia attacks Ukraine with 170 drones 47 people injured


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->