17 ஆண்டுகளுக்கு பின் திரும்பி வெற்றி...! - வங்கதேச பிரதமராக தாரிக் ரஹ்மான் பதவியேற்பு!
Returning victory after 17 years Tariq Rahman sworn Prime Minister Bangladesh
வங்கதேசம் நாட்டின் அரசியலில் முக்கிய திருப்பமாக, கலீதா ஜியாவின் மகனும், வங்கதேச தேசியவாதக் கட்சி (பிஎன்பி) தலைவருமான தாரிக் ரஹ்மான் இன்று மதியம் பிரதமராக பதவியேற்றார். 17 ஆண்டுகளுக்குப் பிறகு தாய்நாட்டுக்கு திரும்பிய அவர், தேர்தல் களத்தில் நேரடியாக களம் இறங்கி வெற்றி பெற்று ஆட்சிப் பொறுப்பை கைப்பற்றியுள்ளார்.

மேலும்,60 வயதான தாரிக் ரஹ்மான், முன்பாகவே பாராளுமன்றத்தில் பிஎன்பி கட்சி தலைவராக தேர்வு செய்யப்பட்டிருந்தார். தற்போது பிரதமராக பதவி ஏற்றுள்ள நிலையில், புதிய அமைச்சரவை விரைவில் பதவியேற்க உள்ளது.
அவர் அடுத்த 5 ஆண்டுகள் நாட்டை வழிநடத்த உள்ளார்.அதுமட்டுமின்றி,வங்கதேசத்தின் 13-வது நாடாளுமன்றத் தேர்தல் கடந்த 12-ந்தேதி நடைபெற்றது.
மொத்தம் 297 தொகுதிகளில் 209 இடங்களை பிஎன்பி கைப்பற்றி பெரும்பான்மை சாதனை படைத்தது.
அதேவேளை வலதுசாரி அரசியல் சக்தியான ஜமாத்-இ-இஸ்லாமி 68 இடங்களில் வெற்றி பெற்று குறிப்பிடத்தக்க ஆதரவைப் பெற்றது.இதன் மூலம் வங்கதேச அரசியலில் புதிய அதிகார அத்தியாயம் தொடங்கியுள்ளது.
English Summary
Returning victory after 17 years Tariq Rahman sworn Prime Minister Bangladesh