311 வாக்குகள் சாதனை: தாய்லாந்தின் புதிய பிரதமராக அனுடின் சார்ன்விரகுல்
Record 311 votes Anutin Charnwirakul becomes Thailands new Prime Minister
அண்மையில்,தாய்லாந்து மற்றும் கம்போடியா எல்லை மோதல் மீண்டும் தீவிரமடைந்தது. இதையடுத்து தாய்லாந்து பிரதமர் பேடோங்டர்ன் ஷினவத்ரா, கம்போடியா பிரதமர் ஹுன் சென்னுடன் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினார்.

அப்போது தாய்லாந்து ராணுவ தளபதியை விமர்சித்ததாக தெரிவித்ததால், பேடோங்டர்ன் மீது கடும் எதிர்ப்பு எழுந்தது. இதன் காரணமாக அவர் பிரதமர் பதவியில் இருந்து நீக்கப்பட்டார்.
இதையடுத்து,புதிய பிரதமரை தேர்வு செய்வதற்கான வாக்கெடுப்பு நேற்று நடைபெற்றது. இதில் பூம்ஜைதாய் கட்சியின் தலைவர் அனுடின் சார்ன்விரகுல், மொத்தம் 492 வாக்குகளில் 311 வாக்குகளை பெற்று பெரும்பான்மை பெற்றார்.
இதன் மூலம் அவர் தாய்லாந்தின் புதிய பிரதமராக அவர் தேர்வு செய்யப்பட்டார்.
English Summary
Record 311 votes Anutin Charnwirakul becomes Thailands new Prime Minister