நாங்க புடிச்சுட்டோம்...! என புதின் அதிரடி முழக்கம்...! - 'இல்லை, சான்ஸே இல்லை'...! என ஜெலென்ஸ்கி மறுப்பு...! - உக்ரைன் தொழில் நகரத்தில் உச்சகட்ட பதற்றம்...!
Putin slogan No chance Zelensky denies Tensions at peak Ukrainian industrial city
ரஷியா - உக்ரைன் போரில் புதிய திருப்பத்தை ஏற்படுத்தும் வகையில், கிழக்கு உக்ரைனின் முக்கிய தொழில் நகரமான கொஸ்தியந்தினிவ்கா முழுமையாக ரஷியப் படைகளின் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிட்டதாக ரஷிய ராணுவத் தலைமை தளபதி ஜெனரல் வலேரி கெராசிமோவ், அதிபர் விளாடிமிர் புதினிடம் அதிகாரப்பூர்வமாக தெரிவித்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நடவடிக்கையை ரஷியாவின் மிக முக்கிய உத்திசார் வெற்றியாக புதின் பாராட்டியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.ஆனால், இந்த அறிவிப்பை உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி திட்டவட்டமாக மறுத்துள்ளார். ரஷியா கூறுவது உண்மைக்கு முற்றிலும் புறம்பானது என்றும், அந்த நகரம் உண்மையிலேயே ரஷியாவின் கட்டுப்பாட்டில் இருந்தால், அதிபர் புதின் நேரடியாக அங்கு வந்து தன்னைச் சந்திக்கத் தயாரா என்று வெளிப்படையாக சவால் விடுத்துள்ளார்.

போர்க்களத்தில் நிலவும் உண்மைச் சூழலை மறைத்து உலக நாட்களை தவறாக வழிநடத்தும் முயற்சியே இது என்றும் அவர் விமர்சித்துள்ளார்.மேலும், அமெரிக்காவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு அந்நாட்டு ஜனாதிபதி டொனால்டு டிரம்பை தவறாக நம்ப வைக்கும் நோக்கிலேயே புதின் இந்த தகவலை வெளியிட்டதாகவும் ஜெலென்ஸ்கி குற்றம்சாட்டியுள்ளார்.
இதற்கிடையில், உக்ரைன் ராணுவம் ரஷியாவின் 2-வது பெரிய நகரமான செயின்ட் பீட்டர்ஸ்பர்க்கில் அமைந்துள்ள முக்கிய எண்ணெய் சேமிப்பு கிடங்கு மற்றும் குரோன்ஸ்டாட் ராணுவத் தளத்தை குறிவைத்து 72 டிரோன்கள் மூலம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தத் தாக்குதலால் ரஷியாவின் சில பகுதிகளில் எரிபொருள் விநியோகம் பாதிக்கப்பட்டதாகவும், பெல்கோரோட் நகரின் பல பகுதிகள் மின்தடை காரணமாக இருளில் மூழ்கியதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
இதற்கு பதிலடியாக ரஷியப் படைகள் நடத்திய தாக்குதலில், உக்ரைனின் ஜாபோரிஷியா பகுதியில் 2 குழந்தைகள் உட்பட 8 பேர் காயமடைந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இரு நாடுகளும் தொடர்ந்து தாக்குதல்களை தீவிரப்படுத்தி வரும் நிலையில், போர்க்களத்தில் பதற்றம் மேலும் அதிகரித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
English Summary
Putin slogan No chance Zelensky denies Tensions at peak Ukrainian industrial city