லாபகரமான ஒப்பந்தம்! ஜப்பான் அமெரிக்காவிற்கு 15% பரஸ்பர வரி செலுத்தும்..! - டிரம்ப் அறிவிப்பு
Profitable deal Japan pay 15percentage reciprocal tax US Trump announcement
அமெரிக்கா அதிபர் டொனால்ட் டிரம்ப் பல்வேறு நாடுகளுடன் வர்த்தக ஒப்பந்தம் தொடர்பாக தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இதில் சில நாடுகளுடன் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. இந்நிலையில் ஜப்பானுடன் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டிரம்ப் அறிவித்துள்ளார்.

டொனால்ட் டிரம்ப்:
இதுகுறித்து அவர் தெரிவித்ததாவது,"ஜப்பானுடன் மிகப்பெரிய ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. அந்த நாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 15% வரிகள் விதிக்கப்படும்.இதுவரை செய்யப்பட்ட மிகப்பெரிய ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, அமெரிக்கா 90% லாபத்தைப் பெறும்.
ஜப்பான் அமெரிக்காவில் 550 பில்லியன் டாலர்களை முதலீடு செய்யும். இந்த ஒப்பந்தம் லட்சக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும். இதுபோன்ற எதுவும் இதற்கு முன்பு இருந்ததில்லை.
ஜப்பான் அமெரிக்காவிற்கு 15 % பரஸ்பர வரிகளை செலுத்தும். இது அமெரிக்காவிற்கு மிகவும் உற்சாகமான நேரம். ஜப்பானுடன் நாம் எப்போதும் சிறந்த உறவைக் கொண்டிருப்போம்" என்று தெரிவித்துள்ளார்.
அதேபோல் பிலிப்பைன்ஸ் நாடுடனும் வர்த்தக ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
English Summary
Profitable deal Japan pay 15percentage reciprocal tax US Trump announcement