வெங்காயத்தால் பீதியடைந்த மக்கள் - நடந்தது என்ன? - Seithipunal
Seithipunal


அமெரிக்காவில், சால்மோனெல்லா பாக்டீரியா ஒளிந்திருக்கும் வெங்காயத்தை உண்டதால் நூற்றுக்கும் மேலானோர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழப்புகள் ஏதும் இல்லாதபோதும், மக்கள் மத்தியில் ஒருவித அச்சம் எழுந்துள்ளது.

அமெரிக்கா நாட்டில் கில்ஸ் ஆனியன்ஸ் என்ற நிறுவனம் வெங்காய ரகங்களை நறுக்கியும், அவற்றை செலரி மற்றும் கேரட்டுடன் கலவையாகவும் பேக் செய்தும் சந்தையில் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், கிளாஸ் ஆனியன்ஸ் நிறுவனம் சால்மோனெல்லா எச்சரிக்கையை அடுத்து, தனது வெங்காய பாக்கெட்டுகள் அனைத்தையும் திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது.

இதற்கிடையே இந்த பாதிப்பு தொடர்பாக அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் தெரிவித்துள்ளதாவது, "நறுக்கி விற்பனைக்கு வரும் வெங்காயத்தில் சால்மோனெல்லா பாக்டீரியா கணிசமாக கண்டறியப்பட்டுள்ளது. 

உணவை, சுமார் 150 பாரன்ஹீட் வெப்பத்தில் சூடாக்கும்போது சால்மோனெல்லா பாக்டீரியா செயலிழந்துவிடும். அப்படி முறையாக வேகாத வெங்காயத்தால் சால்மோனெல்லா பாதிப்பு அதிகரிக்கக்கூடும்.

கில்ஸ் ஆனியன்ஸ் உள்ளிட்ட நிறுவனங்கள் தங்கள் விற்பனைப்பொருட்களை திரும்பப்பெறுவதுடன், அமெரிக்கர்கள் தங்களது குளிர்சாதனப் பெட்டி சேமிப்பில் இருக்கும் வெங்காயத்தையும் உடனடியாக அப்புறப்படுத்துமாறு அறிவுறுத்தல் வெளியிட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

peoples fear for salmonella bacteria on onion in america


கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?



Advertisement

கருத்துக் கணிப்பு

"இண்டி கூட்டணி ஆட்சி அமைந்தால் ஆண்டுக்கு ஒருவர் பிரதமராக பதவி வகிப்பார்கள்" என்று அமித் ஷா கூறியிருப்பது பற்றி உங்கள் கருத்து?




Seithipunal
--> -->