பாகிஸ்தானில் பெரும் சோகம்.. வேன் மீது லாரி மோதி விபத்து.. 12 பேர் பலி.! - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானில் வேன் மீது லாரி மோதிய விபத்தில் சிறுமி உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர்.

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணம் குஜ்ரன்வாலா நகரில் சாலையில் அதிவேகத்தில் சென்ற குப்பை லாரி ஒன்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து எதிர்த்திசையில் வந்த 2 வேன்கள் மீது அடுத்தடுத்து மோதியது.

இந்த கோர விபத்தில் 2 வேன்களில் பயணம் செய்த ஒரு சிறுமி உட்பட 12 பேர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் 10-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்தனர். 

மேலும், விபத்தை ஏற்படுத்திய ஓட்டுநர் அங்கிருந்து தப்பி ஓடியுள்ளார். இது குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் தப்பி ஓடிய ஓட்டுனரை தீவிரமாக தேடி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Pakistan van accident 12 persons death


கருத்துக் கணிப்பு

டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்?Advertisement

கருத்துக் கணிப்பு

டி20 உலகக்கோப்பையை எந்த அணி வெல்லும்?
Seithipunal