கார் விபத்தில் பாகிஸ்தான் அமைச்சர் உயிரிழப்பு - 5 பேர் கைது - Seithipunal
Seithipunal


பாகிஸ்தானின் ஜமீத் உலிமா இஸ்லாம் கட்சியைச் சேர்ந்தவர் முப்தி அப்துல் ஷக்கூர். கைபர் பக்துன்க்வா மாகாணத்தின் லக்கி மார்வாட் பகுதியை சேர்ந்த இவர், பிரதமர் ஷபாஸ் ஷெரீப் தலைமையிலான அமைச்சரவையில் மத விவகார அமைச்சராக பணியாற்றி வந்தார். இவர் மேடையில் தனது அனல் பறக்கும் பேச்சால் அனைவரையும் ஈர்க்க கூடியவர்.

இந்நிலையில் நேற்று இஸ்லாமாபாத்தில் அமைச்சர் தனியாக காரில் அரசியலமைப்பு அவென்யூவை நோக்கிப் பயணித்துக்கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக திடீரென வேகமாக வந்த கார் ஒன்று அமைச்சர் காரின் மீது பயங்கரமாக மோதியது. இதையடுத்து அருகில் இருந்தவர்கள் அமைச்சரை மீட்டு பாலி கிளினிக் மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர்.

ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி அமைச்சர் உயிரிழந்தார். இதனிடையே விபத்தை ஏற்படுத்திய காரிலிருந்த ஐந்து பேரை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மேலும் விபத்தில் உயிரிழந்த அமைச்சர் முப்தி அப்துல் ஷக்கூரின் குடும்பத்திற்கு பிரதமர் ஷபாஸ் ஷெரீப் மற்றும் அரசியல் தலைவர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pakistan minister died in car accident


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->