பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் கைது! ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை!
Pakistan Ex Prime Minister arrested
பெஷாவார்: பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் இம்ரான் கான் ஊழல் வழக்கில் 3 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து இஸ்லாமாபாத் விசாரணை நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதனால் பாகிஸ்தான் முன்னால் பிரதமர் இம்ரான் கான் உடனடியாக கைது செய்யப்பட்டார்.
மேலும் ஐந்து ஆண்டுகளுக்கு அரசியலில் எவ்வித தேர்தலிலும் போட்டியிட முடியாத நிலையில் அவர் தகுதி இழந்துள்ளார். 2018 ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இம்ரான் கான் பாகிஸ்தான் பிரதமராக பதவி ஏற்றார்.
பின்னர் அவரது தலைமையிலான கூட்டணி கட்சியில் இருந்து விலகி எதிர்க்கட்சியுடன் இணைந்தார். இதனால் இம்ரான் கானுக்கு எதிராக நாடாளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவரப்பட்டது.
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இம்ரான் கான் பிரதமர் பதவியில் இருந்து விலகி, ஷெபாஸ் ஷெரீப் பிரதமராக பதவி ஏற்றார். இம்ரான் கான் பதவி இழப்புக்குப் பிறகு ஊழல், மோசடி, கொலை மிரட்டல் என பல்வேறு வழக்குகள் அவர் மீது பதிவு செய்யப்பட்டது.

இம்ரான் கான் கடந்த 2018 முதல் 2022 வரை பிரதமராக இருந்தபோது அவர் வெளிநாட்டு பயணங்கள் மேற்கொண்டார். அப்போது அவருக்கு வழங்கப்பட்ட நினைவு பரிசுகள் விலை உயர்ந்த பொருட்களை விற்று அதில் கிடைத்த பணத்தை மோசடி செய்ததாகவும் அவர் மீது வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை இஸ்லாமாபாத் நீதிமன்றம் விசாரித்து வந்த நிலையில் இம்ரான் கான் குற்றவாளி என்று நீதிமன்றம் உறுதி செய்து அவருக்கு 3 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்கியது.
இம்ரான் கான் மற்றும் அவரது மனைவிக்கு சொந்தமாக காதிர் அறக்கட்டளை மூலம் 5000 கோடி ஊழல் செய்ததாக ஏற்கனவே குற்றம் சாட்டப்பட்டது. அந்த வழக்கில் ஊழல் தடுப்பு ஆணையம் இம்ரான் கானை கைது செய்ய உத்தரவிட்டதை தொடர்ந்து அவர் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Pakistan Ex Prime Minister arrested