உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை மூலம் 150 ஆண்டுகள் வாழலாம்! புதின் - ஜி ஜின்பிங் பேசிய உரையாடல் லீக்! - Seithipunal
Seithipunal


உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சைகள் மற்றும் உயிரி தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மூலம் “இறவாமை” சாத்தியமா? என்ற கேள்வி சர்வதேச அரங்கில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சீன அதிபர் ஜி ஜின்பிங் மற்றும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் இடையிலான தனிப்பட்ட உரையாடல் மைக் வழியாக கசிந்ததால் இந்த விவகாரம் உலகம் முழுவதும் வைரலாகியுள்ளது.

சீனாவின் பெய்ஜிங்கில் உள்ள தியனன்மென் சதுக்கத்தில் நடைபெற்ற இராணுவ அணிவகுப்பில் பங்கேற்ற இரு தலைவர்களும் அங்கு நடந்து செல்லும் போது, இறவாமை குறித்து உரையாடினர்.

அதில், ஜி ஜின்பிங் கூறியதாவது:“கடந்த காலங்களில், மக்கள் 70 வயதைக் கடந்தும் வாழ்வது அரிது என்று கருதப்பட்டு வந்தது. ஆனால் இன்று, உங்கள் 70 வயதிலும் கூட நீங்கள் குழந்தை போல் உள்ளீர்கள்.”

அதற்கு புதின் பதிலளித்தபோது,“சில ஆண்டுகளில் உயிரி தொழில்நுட்பத்தின் வளர்ச்சியால் மனித உறுப்புகள் தொடர்ந்து மாற்றப்படக்கூடிய நிலை வரும். மனிதர்கள் எவ்வளவு நாளும் வாழ்ந்தாலும், அவ்வளவு இளமையாகவே இருக்க முடியும். இறவாமையே கூட சாத்தியமாகலாம்” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த ஜி ஜின்பிங்,“இந்த நூற்றாண்டுக்குள் மனிதர்கள் 150 ஆண்டுகள் வரை வாழ முடியும் என்று பலர் கணிக்கிறார்கள்” என்றார்.இந்நிலையில், இருவருடன் சென்ற வட கொரிய தலைவர் கிம் ஜாங் உன் அந்த உரையாடலைக் கவனித்து சிரித்ததாகவும், ஆனால் அதன் மொழிபெயர்ப்பை கேட்டாரா என்பது தெளிவாக தெரியவில்லை என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், புதின் இந்த உரையாடலை உறுதிப்படுத்தினார். அவர்,“அணிவகுப்புக்கு நடந்து செல்லும் போது ஜி ஜின்பிங் இதைப் பற்றிப் பேசியார் என்று நினைக்கிறேன். தொழில்நுட்பம், சுகாதார அமைப்புகள் மற்றும் அறுவைச் சிகிச்சைகளின் திறனை முழுமையாக பயன்படுத்தினால், எதிர்காலத்தில் மனிதர்கள் மிகவும் சுறுசுறுப்பான, நீண்ட ஆயுளான வாழ்க்கையை வாழ முடியும்” என்று தெரிவித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Organ transplants can help you live to 150 years Putin Xi Jinping conversation leaked


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->