'உங்களுடன் ஸ்டாலின்' முகாமில் நடந்ததாகச் சொல்வது உண்மையா? முதியவர் தாக்குதல் குறித்த காவலர்கள் விளக்கம்...! - Seithipunal
Seithipunal


நேற்று நடைபெற்ற "உங்களுடன் ஸ்டாலின் முகாமில்" மனு கொடுக்க வந்த வயதானவரை காவலர்கள் கடுமையாக தாக்கியதாக வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது.இதுகுறித்து ராணிப்பேட்டை காவல்துறை அறிக்கை வெளியிட்டுள்ளது.

அதில் குறிப்பிட்டதாவது,"ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு அடுத்த சாத்தூர் ஊராட்சியில் முகாமில், சாத்தூர் கிராம நிர்வாக அலுவலரிடம் சாத்தூர் கிராமத்தை சேர்ந்த 'வெங்கடபதி' (வ/65) என்பவர் மனு சம்மந்தமாக வாக்குவாதம் செய்து திடீரென கிராம நிர்வாக அலுவலரை கையால் தாக்கியதுடன், அரசு பணியை மேற்கொள்ள விடாமல் தடுத்ததும் தெரியவந்துள்ளது.

இந்த நிகழ்வு குறித்து காணொளி பொது வெளியில் பகிரப்பட்டுள்ளது.அங்கு பணியிலிருந்த உதவி ஆய்வாளர் பிரபாகரன், பிரச்சினை  தீவிரமடையாமல் தடுக்கும் வகையில் தக்க நடவடிக்கை மேற்கொண்டார்.

இதில் அவரை வெளியேற்றும் நோக்கில் உதவி ஆய்வாளர் குறைந்த அளவு பலத்தை பயன்படுத்தி சம்பவம் இடத்திலிருந்த அரசு அழியரை பணி செய்ய விடாமல் தடுத்த வெங்கடபதியை அனுப்பியதாக தெரியவருகிறது.

இதுகுறித்த விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.மேலும், இச்சம்பவத்தின் முழு காணொளியிலிருந்து, உதவி ஆய்வாளர் மற்றும் வெங்கடபதிக்கு இடையிலான நிகழ்வின் ஒரு பகுதியை மட்டுமே இணையத்தில் பெரிது படுத்தி பரப்பி வருகின்றனர். மேலும், பொதுமக்கள் இவ்வாறு பரப்பப்படும் செய்திகளை நம்ப வேண்டாம் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Police explanation about old man assaulted in ungaludan stalin camp


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->