டிஜிட்டல் கைது மோசடி!இன்ஸ்டாகிராமில் 'ஐ லவ் யூ' பதிவால் ரூ. 11 ஆயிரம் இழந்த சிறுவன்! - Seithipunal
Seithipunal


ஆந்திர மாநிலம் விஜயவாடாவைச் சேர்ந்த 15 வயது சிறுவன், இன்ஸ்டாகிராம் மூலம் சைபர் குற்றவாளிகளின் கண்ணில் சிக்கி ரூ.11,000 இழந்த அதிர்ச்சி சம்பவம் வெளிச்சம் கண்டுள்ளது.

இன்ஸ்டாகிராமில் அறிமுகமான ஒரு பெண்ணுடன் சிறுவன் அடிக்கடி வீடியோக்கள் பரிமாறிக்கொண்டார். சில நாட்களுக்கு முன்பு அந்தப் பெண், “?2? ஸவ் யூ” என்கிற குறுந்தகவலை அனுப்பினார். அதற்கு சிறுவன் “I Love You Too” என பதிலளித்தான்.

மறுநாள், அடையாளம் தெரியாத ஒருவர் சிறுவனின் மொபைல் எண்ணுக்கு அழைத்து, “நீங்கள் இன்ஸ்டாகிராமில் சந்தித்த பெண்ணிடம் ‘I Love You’ சொன்னீர்களா? அதை அவளது கணவர் அறிந்துவிட்டார். இப்போது அவர் போலீசில் புகார் கொடுத்துள்ளார். நீங்கள் உடனே மைலாவரம் போலீஸ் நிலையத்திற்கு வர வேண்டும்” என்று மிரட்டினார்.

திடீரென வந்த இந்த அழைப்பால் பயந்துபோன சிறுவன் அழுது, “நான் சொல்வதை எல்லாம் செய்வேன்” என்று கூறியுள்ளார். இதனை பயன்படுத்திக் கொண்ட குற்றவாளி, ஆன்லைன் மூலம் உடனே ரூ.11,000 அனுப்ப வேண்டும் எனக் கூறியுள்ளார். பயந்துபோன சிறுவன் அந்த தொகையை அனுப்பிவிட்டார்.

சைபர் குற்றவாளிகள் இதுவரை டிஜிட்டல் கைது (Digital Arrest Scam) எனப்படும் பெயரில் மக்களை ஏமாற்றி வந்த நிலையில், தற்போது இளைஞர்களின் ஆன்லைன் தொடர்புகள் மற்றும் உணர்ச்சி வசப்படுத்தும் வார்த்தைகள் ஆகியவற்றை ஆயுதமாக்கி பணம் பறிக்கும் புதிய முறையைத் தொடங்கியுள்ளனர்.

இளைஞர்கள், குறிப்பாக சிறுவர்கள், சமூக வலைதளங்களில் யாருடனும் தனிப்பட்ட வீடியோ, புகைப்படம், அல்லது நெருக்கமான உரையாடல்களை மேற்கொள்ளாமல் இருக்க வேண்டும் என சைபர் பாதுகாப்பு நிபுணர்கள் எச்சரிக்கின்றனர். சந்தேகமான அழைப்புகள் வந்தால் உடனடியாக பெற்றோருக்கும் போலீசாருக்கும் தெரிவிக்க வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

 இந்தச் சம்பவம், சமூக வலைதளங்கள் மூலம் சைபர் குற்றவாளிகள் எவ்வாறு வாலிபர்களை குறிவைக்கிறார்கள் என்பதற்கு சமீபத்திய உதாரணமாக அமைந்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Digital arrest scam Boy loses Rs 11 thousand by posting I love you on Instagram


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->