'நாட்டின் புதிய வளர்ச்சியை புரிந்து கொள்ள, புதிய பொருளாதார கோட்பாடுகள் அவசியம்'; ஆளுநர் ரவி..! - Seithipunal
Seithipunal


இந்திய பொருளாதார சங்கத்தின் 108-ஆம் ஆண்டு மாநாடு, சென்னை பல்லாவரத்தில் உள்ள வேல்ஸ் உயர் தொழில்நுட்ப கல்வி நிறுவன வளாகத்தில் கடந்த 27-ஆம் தேதி தொடங்கிய நிலையில், இன்று  அதன் நிறைவு விழா நடைபெற்றது. விழாவில், வேல்ஸ் கல்விக் குழும தலைவர் ஐசரி கணேஷ், வி.ஐ.டி., நிறுவனர் விசுவநாதன் உள்பட பலருடன் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டார். விழாவில் ஆளுநர் ரவி பேசுகையில் கூறியதாவது:

கடந்த 19-ஆம் நுாற்றாண்டு துவக்கத்தில், உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக இந்தியா இருந்தாகவும், காலனித்துவ ஆட்சி காலத்தில் நம் நாட்டின்  பொருளாதாரம் சிதைக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.

தற்போது, உலகின் நான்காவது பெரிய பொருளாதார நாடாக இந்தியா உள்ளதாகவும், விரைவில் நாம் மூன்றாம் இடத்தை அடைவோம் என்றும் குறிப்பிட்டுள்ளார். மேலும், கடந்த 10 ஆண்டுகளில், 25 கோடி மக்கள் தீவிர வறுமையில் இருந்து மீட்கப்பட்டு உள்ளனர். இதுபோன்ற சாதனைகள் உலகில் வேறு எங்கும் நடந்திருக்காது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

அத்துடன், இந்திய பொருளாதார வளர்ச்சி குறித்து கவலை வேண்டாம் என்றும், அது சரியான பாதையில் பயணிக்கிறது என்றும் கூறியுள்ளார்.

தொடர்ந்து அவர் பேசுகையில், நாம் மேற்கத்திய நாடுகள் வகுத்த அளவுகோல்களை வைத்து, இந்திய பொருளாதாரத்தை மதிப்பிடுகிறோம் என்றும், ஜி.டி.பி., வேலைவாய்ப்பு ஆகியவை மட்டுமே அளவுகோல்களாக உள்ளன. மத்திய அரசின் முத்ரா கடன் திட்டத்தால், நாட்டில் 52 கோடி பேர் பயன் அடைந்துள்ளனர் என்று தெரிவித்துள்ளார். மேலும், இதுவரை, 33 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்கப்பட்டுள்ளதாகவும், தமிழகத்தில் மட்டும், 3.25 லட்சம் கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டுள்ளதாக ஆளுநர் ரவி கூறியுள்ளார்.

அத்துடன், வளர்ச்சி என்பது வருமானம் மட்டும் கிடையாது என்றும், அது  குடிநீர், மின்சாரம், வீடு, கழிப்பிடம், சுகாதாரம், காப்பீடு போன்ற அடிப்படை வசதிகள் அனைவருக்கும் கிடைத்திருக்கின்றன. இவை அனைத்தும் பொருளாதார வளர்ச்சியின் பகுதிகள்தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலு, நாட்டின் புதிய பொருளாதார வளர்ச்சியை புரிந்துகொள்ள, புதிய பொருளாதார கோட்பாடுகள் அவசியம் என்று குறிப்பிட்டுள்ளார். உண்மையான தரவுகளை சேகரித்து, புதிய பொருளாதார மொழியை உருவாக்குவது, இன்றைய பொருளாதார அறிஞர்களின் கடமை என்றும்  வலியுறுத்தியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Governor Ravi says that new economic theories are necessary to understand the countrys new growth


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->