தடைப்பட்ட நாடுகளையும் தாண்டி வசூல் வேட்டை…கோடிகளை கிளப்பிய ‘துரந்தர்' பட வசூல் எவ்வளவு தெரியுமா...?
Do you know how much Durandhar film collected crores
பாலிவுட் முன்னணி இயக்குநர் ஆதித்யா தார் இயக்கத்தில், ரன்வீர் சிங் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ள ‘துரந்தர்’ திரைப்படம் கடந்த 5-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இப்படத்தில் ஆர். மாதவன், அக்ஷய் கன்னா, அர்ஜுன் ராம்பால், சஞ்சய் தத், சாரா அர்ஜுன் உள்ளிட்ட நட்சத்திர நடிகர்கள் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
வெளியான முதல் நாளிலிருந்தே இப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பேராதரவும் வரவேற்பும் கிடைத்து வருகிறது.பாகிஸ்தானில் நடைபெற்றதாக தெரிவிக்கப்படுவது, ‘ஆபரேஷன் லியாரி’ மற்றும் இந்திய உளவுத்துறை அமைப்பான ‘ரா’ மேற்கொண்ட ரகசிய நடவடிக்கைகளை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம், சர்ச்சைகளுக்கும் பரபரப்புக்கும் மத்தியில் திரைக்கு வந்தது.

அரசியல் மற்றும் பாதுகாப்பு காரணங்களால் 6 வளைகுடா நாடுகளில் தடை செய்யப்பட்டாலும், உலகம் முழுவதும் திரையரங்குகளில் இப்படம் வசூல் வேட்டையில் தொடர்ந்து முன்னேறி வருகிறது.
இந்த நிலையில், படம் வெளியான 24 நாட்களில் ‘துரந்தர்’ திரைப்படம் உலகளவில் ரூ. 1100.23 கோடி வசூலைக் குவித்து புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையில் படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டரை வெளியிட்டு மகிழ்ச்சியை பகிர்ந்துள்ளது.
அதன்படி, இந்தியாவில் மட்டும் ரூ. 862.23 கோடியும், வெளிநாடுகளில் ரூ. 238 கோடியும் வசூலித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இந்த அபார வெற்றியின் மூலம், 2025-ஆம் ஆண்டில் அதிக வசூல் செய்த திரைப்படம் என்ற பெருமைமிக்க சாதனையையும் ‘துரந்தர்’ தன் வசம் செய்துள்ளது.
English Summary
Do you know how much Durandhar film collected crores