திரையில் வில்லி… நிஜத்தில் மோசடியா...? - சீரியல் நடிகை ராணி மீது வழக்கு
villain screen fraud real life case filed against serial actress Rani
பிரபல தொலைக்காட்சி சீரியல் நடிகை ராணி மீது பண மோசடி புகார் எழுந்து பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.‘அலைகள்’ என்ற சீரியல் மூலம் ரசிகர்களிடையே பரவலான அறிமுகம் பெற்ற ராணி, அதனைத் தொடர்ந்து அத்திப்பூக்கள், முன் ஜென்மம், வள்ளி, குலதெய்வம் உள்ளிட்ட பல வெற்றிச் சீரியல்களில் நடித்துள்ளார்.
குறிப்பாக பல தொடர்களில் வில்லி கதாபாத்திரங்களில் மிரட்டலான நடிப்பை வெளிப்படுத்தி கவனம் ஈர்த்தவர்.
இந்த நிலையில், கரூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஓட்டல் உரிமையாளரை ஏமாற்றி ரூ.10 லட்சம் பண மோசடி செய்ததாக நடிகை ராணி, அவரது கணவர் உள்ளிட்ட மூன்று பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இந்த புகாரில், பாதிக்கப்பட்டவரிடம் இருந்து ஒரு கார் மற்றும் 5 சவரன் நகைகள் பெற்றுக் கொண்டு, அதை திருப்பி வழங்காமல் நடிகை ராணி மோசடி செய்ததாக குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் திரையுலக வட்டாரத்திலும் ரசிகர்களிடையிலும் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.இந்த வழக்கு தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
villain screen fraud real life case filed against serial actress Rani