பிப்ரவரி 1-க்கு முன் மோடி ஆலோசனை…! 2026–27 மத்திய பட்ஜெட்டுக்கு தீவிர ஆலோசனை...! - Seithipunal
Seithipunal


2026–27 நிதியாண்டுக்கான மத்திய பட்ஜெட் வரும் பிப்ரவரி 1-ஆம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்ப்பு நிலவி வருகிறது.

மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் இந்த முக்கியமான பட்ஜெட்டை சமர்ப்பிக்க உள்ள நிலையில், உலக அரசியல் அரங்கில் தொடரும் நிச்சயமற்ற சூழல், இந்தியா மீது அமெரிக்கா விதித்துள்ள 50 சதவீத வரி உள்ளிட்ட சர்வதேச அழுத்தங்கள் ஆகியவற்றின் பின்னணியில் இந்த பட்ஜெட் மிகுந்த கவனத்தை பெற்றுள்ளது.

இத்தகைய சூழலில், மத்திய பட்ஜெட்டுக்கு முன் பல்வேறு துறைகளின் கருத்துக்களை அறிந்து கொள்ளும் நோக்கில், பிரதமர் நரேந்திர மோடி புகழ்பெற்ற பொருளாதார நிபுணர்கள் மற்றும் துறைசார் வல்லுநர்களை செவ்வாய்க்கிழமை (நாளை) சந்தித்து ஆலோசனை நடத்த உள்ளார்.

நாட்டின் பொருளாதார பாதையை தீர்மானிக்கும் வகையில் நடைபெறும் இந்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

இந்த ஆலோசனைக் கூட்டத்தில் நிதி ஆயோக் துணைத் தலைவர் சுமன் பெரி, நிதி ஆயோக் தலைமை செயல் அதிகாரி பி.வி.ஆர். சுப்ரமணியம், மேலும் நிதி ஆயோக் உறுப்பினர்கள் உள்ளிட்ட பல்வேறு உயரதிகாரிகள் பங்கேற்க உள்ளனர்.

வரவிருக்கும் பட்ஜெட்டில் வளர்ச்சி, முதலீடு, வரி கொள்கை மற்றும் உலகளாவிய பொருளாதார சவால்களை எதிர்கொள்ளும் திட்டங்கள் குறித்து இந்த ஆலோசனையில் விவாதிக்கப்பட உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Modi hold consultations before February 1 Intensive consultations 2026 to 27 Union Budget


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->