காதல் வேஷத்தில் கொடூரன்! சகோதரிகளிடம் பாலியல் தொல்லை, ரூ.1 கோடி மோசடி – பெங்களூருவில் அதிர்ச்சி...!
cruel man guise lover harassment sisters and 1 crore fraud shocking incident Bengaluru
கர்நாடக மாநிலம் பெங்களூரு – பாகலகுண்டே போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் வசித்து வந்த ஒரு இளம்பெண்ணின் வாழ்க்கையை உலுக்கிய அதிர்ச்சி சம்பவம் தற்போது வெளிச்சத்திற்கு வந்துள்ளது. அந்த இளம்பெண் தனது பெற்றோர் மற்றும் தங்கையுடன் வாழ்ந்து வந்த நிலையில், அதே பகுதியில் குடியிருந்த சுபான்ஷி சுக்லா (27) என்பவருடன் குடும்பத்திற்குள் பழக்கம் ஏற்பட்டுள்ளது.

முதலில், இளம்பெண்ணின் சிறுமியான தங்கையுடன் ஏற்பட்ட நட்பு காரணமாக, சுபான்ஷி சுக்லா அந்த வீட்டிற்கு அடிக்கடி சென்று வந்துள்ளார். இதன் மூலம் குடும்பத்தினருடன் நெருங்கிய உறவு ஏற்பட்டது.
அந்த நெருக்கம் பின்னர் காதலாக மாறி, இளம்பெண்ணுக்கும் சுபான்ஷி சுக்லாவுக்கும் இடையே உறவு உருவானது.ஒருகட்டத்தில், “மும்பையில் வேலை கிடைத்துள்ளது” எனக் கூறி, இளம்பெண்ணை அழைத்துச் சென்ற சுபான்ஷி சுக்லா, அங்குள்ள ஒரு குடியிருப்பில் திருமணம் செய்யாமலேயே கணவன்–மனைவி போல அவருடன் வாழ்ந்து வந்துள்ளார். பின்னர் தான், சுபான்ஷி சுக்லாவுக்கு ஏற்கனவே திருமணம் நடந்திருந்தது என்பது இளம்பெண்ணுக்கு தெரியவந்தது.
இதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, தனது மனைவியை விவாகரத்து செய்து கொண்டு, உன்னை திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறியதாக தெரிகிறது. ஆனால் இதைத் தொடர்ந்து இருவருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இந்த விவகாரத்தை இளம்பெண் தனது பெற்றோரிடம் தெரிவித்ததை அடுத்து, அவர்கள் பாகலகுண்டே காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.புகாரின் அடிப்படையில் தலைமறைவாக இருந்த சுபான்ஷி சுக்லாவை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தினர்.
அந்த விசாரணையில், மேலும் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகின. இளம்பெண்ணை காதலித்து பாலியல் வன்கொடுமை செய்யும் முன்பே, அவரது சிறுமியான தங்கையையும் பாலியல் தொல்லைக்கு உட்படுத்தியிருப்பது தெரியவந்தது.
மேலும், இந்த விவகாரம் வெளியே தெரிந்தால், சிறுமியையும் குடும்பத்தினரையும் கொலை செய்து விடுவதாக மிரட்டியதாகவும், இளம்பெண்ணிடம் திருமண வாக்குறுதி அளித்து, அவரிடமிருந்து ரூ.1 கோடி மதிப்பிலான நகைகள் மற்றும் பணத்தை மோசடியாக பெற்றதாகவும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.
அந்த நகைகள் மற்றும் பணத்தை மீட்க போலீசார் தீவிர நடவடிக்கை எடுத்து வரும் நிலையில், இந்த சகோதரிகள் மட்டுமின்றி வேறு சில பெண்களையும் காதல் வலையில் வீழ்த்தி மோசடி செய்திருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் சுபான்ஷி சுக்லாவிடம் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.இந்த கொடூர சம்பவம், பெங்களூரு பாகலகுண்டே பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
English Summary
cruel man guise lover harassment sisters and 1 crore fraud shocking incident Bengaluru