கன்னியாகுமரியில் தேர்தல் தீவிரம்! 15 லட்சம் வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கும் பணி...! - கலெக்டர் நேரடி ஆய்வு - Seithipunal
Seithipunal


கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் மற்றும் குளச்சல் சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட குருந்தன்கோடு பகுதியில், வாக்காளர்களுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மூலம் வாக்காளர் தகவல் சீட்டுகள் வழங்கும் பணியை மாவட்ட தேர்தல் அலுவலரும் மாவட்ட கலெக்டருமான அழகுமீனா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதனைத் தொடர்ந்து அவர் தெரிவித்ததாவது,"தமிழக சட்டமன்ற பொதுத்தேர்தல் அறிவிப்பு இந்திய தேர்தல் ஆணையத்தால் 15.03.2026 அன்று வெளியிடப்பட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள கன்னியாகுமரி, நாகர்கோவில், குளச்சல், பத்மநாபபுரம், விளவங்கோடு, கிள்ளியூர் ஆகிய 6 சட்டமன்றத் தொகுதிகளுக்கும் ஒரே கட்டமாக 23.04.2026 அன்று தேர்தல் நடைபெற உள்ளது.

இதற்கான முன்னேற்பாடுகள் அனைத்தும் தேர்தல் ஆணைய வழிகாட்டுதலின்படி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. மாவட்டத்தில் உள்ள 15,20,338 வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நேரில் சென்று வாக்காளர் தகவல் சீட்டுகளை வழங்கி வருகின்றனர். குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் தங்களது தகவல் சீட்டுகளை சரிபார்த்து பெற்றுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த தகவல் சீட்டில் வாக்காளர் விவரங்கள், வாக்குச்சாவடி மையம், QR கோடு, தேர்தல் உதவி எண்கள் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன. QR கோடு மூலம் ECINET செயலியில் பெயர் உள்ளிட்ட விவரங்களை அறிந்து கொள்ளலாம்.

ஆனால், இந்த சீட்டு மட்டும் வாக்குப்பதிவிற்கு போதுமானதல்ல; வாக்காளர் அடையாள அட்டை அல்லது தேர்தல் ஆணையம் அங்கீகரித்த மாற்று ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை கட்டாயமாக எடுத்துச் செல்ல வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்தில் இதுவரை 2.50 லட்சத்திற்கும் மேற்பட்ட வாக்காளர்களுக்கு தகவல் சீட்டு வழங்கப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ளவர்களுக்கு விரைவில் வழங்கும் பணி நிறைவு பெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அனைத்து வாக்காளர்களும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு முழு ஒத்துழைப்பு வழங்கி, 23.04.2026 அன்று தங்கள் வாக்குச்சாவடிக்கு சென்று ஜனநாயகக் கடமையை நிறைவேற்ற வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Elections full swing Kanyakumari Information slips distributed 15 lakh voters Collector live inspection


கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?



Advertisement

கருத்துக் கணிப்பு

இவர்களில் யார் உங்கள் முதல்வர் வேட்பாளர்..?




Seithipunal
--> -->