தண்டையார்பேட்டையில் ரூ.2.50 கோடியில் புதிய பேருந்து நிலையம்: அமைச்சர்கள் திறந்து வைத்தனர்! - Seithipunal
Seithipunal


சென்னை மாநகராட்சி, தண்டையார்பேட்டை மண்டலம் 38-வது வார்டுக்கு உட்பட்ட தண்டையார்பேட்டை ஐஓசி-எண்ணூர் நெடுஞ்சாலையில், டாக்டர் ராதாகிருஷ்ணன் நகர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதி மற்றும் மூலதன நிதியின் கீழ் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டுள்ளது. சுமார் 16 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் அமைக்கப்பட்டுள்ள இப் புதிய பேருந்து நிலையத்தின் திறப்பு விழா நேற்று விமரிசையாக நடைபெற்றது.

இந்நிகழ்ச்சியில் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஆ. விஜய் தமிழன் பார்த்திபன் மற்றும் நிதித் துறை அமைச்சர் மரியவில்சன் ஆகியோர் கலந்துகொண்டு, புதிய பேருந்து நிலையத்தை நாடா வெட்டித் திறந்து வைத்தனர். அத்துடன், அப்பேருந்து நிலையத்திலிருந்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கான பேருந்துச் சேவைகளையும் கொடியசைத்துத் தொடங்கி வைத்தனர்.

பயணிகளின் வசதிக்காக பல்வேறு கட்டமைப்பு வசதிகள் இந்தப் புதிய பேருந்து நிலையத்தில் செய்யப்பட்டுள்ளன. குறிப்பாக, குழந்தைகளுக்குத் தாய்மார்கள் பாலூட்டும் தனி அறை, பயணிகள் காத்திருப்போர் அறை, பேருந்து நேரக் காப்பாளர் (Timekeeper) அறை மற்றும் ஆண்கள், பெண்கள், மாற்றுத்திறனாளிகளுக்கான தனித்தனி கழிப்பறை வசதிகள் இதில் ஏற்படுத்தப்பட்டுள்ளன.

இப்புதிய பேருந்து நிலையத்திலிருந்து நாள்தோறும் 12 பேருந்துகள் மூலம் 122 புறப்பாடுகள் (trips) இயக்கப்படவுள்ளன. இதன் மூலம் தண்டையார்பேட்டை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் 18 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பொதுமக்கள் தினசரிப் போக்குவரத்துப் பயன்பாட்டைப் பெறுவார்கள்.

இந்நிகழ்வில் சென்னை மாநகராட்சி ஆணையர் ஜி.எஸ். சமீரன், மாநகர் போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் வீ.ப. ஜெயசீலன், வடக்கு வட்டாரத் துணை ஆணையர் ஸ்வேதா சுமன், தண்டையார்பேட்டை மண்டல அலுவலர் ஏ. ராஜ்குமார் உள்ளிட்ட அரசு உயர் அதிகாரிகளும், உள்ளாட்சிப் பிரதிநிதிகளும் கலந்துகொண்டனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Ministers Vijay Tamilan Parthiban and Maria Wilson Inaugurate Rs 2.50 Crore Tondiarpet Bus Stand


கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?



Advertisement

கருத்துக் கணிப்பு

இந்த இடைத்தேர்தல் எந்த கட்சிக்கு வாழ்வா சாவா தேர்தல்...?




சினிமா

Seithipunal
--> -->