கோடி கோடியாய் கொள்ளையடித்த பணம்! முதலீடு செய்யவே ஸ்டாலின் வெளிநாடு பயணம்..! பரபரப்பை கிளப்பிய இபிஎஸ்..! - Seithipunal
Seithipunal


அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தனது “மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்” எழுச்சிப் பயணத்தின் போது, மதுரை மேற்கு தொகுதியில் பேசியபோது, தமிழக முதல்வர் ஸ்டாலினை குறிவைத்து கடும் குற்றச்சாட்டுகளை சுமத்தியுள்ளார்.

“இப்போது ஸ்டாலின் வெளிநாடு போய்விட்டார். அவர் தொழில் முதலீட்டை ஈர்க்கப் போகவில்லை; இங்கு கொள்ளையடித்த பணத்தை முதலீடு செய்யப் போயிருக்கிறார்” என பகீர் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

மாநகராட்சியில் நடந்த ஊழலை எடுத்துக்காட்டிய எடப்பாடி, “200 கோடி ரூபாய் ஊழல் நடந்தது என்று செய்தி வந்தது. அதிகாரிகள் கைது செய்யப்பட்டனர், மண்டலத் தலைவர்கள் ராஜினாமா செய்தனர். ஆனால் மேயரை கைது செய்யவில்லை. கணவரை மட்டும் சாதாரண வழக்கில் கைது செய்து திமுக கண் துடைப்பு நாடகம் நடத்துகிறது” என்றார்.

டாஸ்மாக் விற்பனையில் பெரும் ஊழல் நடக்கிறது என்றும் எடப்பாடி குற்றம்சாட்டினார். “ஒரு நாளுக்கு ஒன்றரை கோடி பாட்டில் விற்கிறது. பாட்டிலுக்கு ரூ.10 கூடுதலாகப் பெறுவதால் தினமும் 15 கோடி, மாதம் 450 கோடி, வருடத்துக்கு 5,400 கோடி, கடந்த நான்கு ஆண்டுகளில் 22,000 கோடி ரூபாய் மேலிடம் சென்றுவிட்டது” என்றார்.

ஸ்டாலின் வெளிநாட்டு பயணம் குறித்து எடப்பாடி விமர்சித்து, “ஜெர்மனியில் 3,200 கோடி ஈர்த்ததாகச் சொல்கிறார்கள். ஆனால் அது ஏற்கனவே அதிமுக ஆட்சியில் வந்த தொழிற்சாலை விரிவாக்கம் மட்டுமே. புதிய முதலீடு எதுவும் இல்லை. திமுக போடும் புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் 10% கூட நடைமுறைக்கு வரவில்லை. மக்கள் கண்ணை மூட ஏமாற்றுகிறார்கள்” என்று கூறினார்.

“இந்த ஆட்சியில் நடந்த ஊழல் அனைத்தையும் 2026 தேர்தலில் மக்கள் கணக்குக் கேட்பார்கள். அதிமுக தலைமையில் பலமான கூட்டணி உருவாகும். அது வெற்றிக் கூட்டணியாகும். மதுரை மாவட்டத்தின் அனைத்து தொகுதிகளிலும் அதிமுக கூட்டணி வெற்றி பெறும்” என அவர் உறுதியளித்தார்.

மேலும், “2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழல் – ரூ.1.76 லட்சம் கோடி, அதுபோல் கண்களுக்கு தெரியாத காற்றில்கூட ஊழல் செய்யும் ஒரே கட்சி திமுக தான். இதனால் தமிழ்நாட்டின் பெயர் கெட்டுப் போனது” என எடப்பாடி தாக்குதல் நடத்தியுள்ளார். இதன் மூலம், எடப்பாடி பழனிசாமி தனது எழுச்சிப் பயண மேடையை முழுமையாக திமுக அரசின் ஊழலை எதிர்த்து பயன்படுத்தி வருவதாகத் தெளிவாகிறது.

 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Crores of looted money Stalin foreign trip to invest EPS that created a stir


கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேர்தல் ஆணையத்தின் மீதான ராகுல்காந்தியின் குற்றச்சாட்டு!




Seithipunal
--> -->