X Ray கதிர்வீச்சு வடிவமைப்பை கண்டுபிடித்த ரோசலிண்ட் ஃபிராங்கிளின் அவர்கள் பிறந்ததினம்!.
On the birthday of Rosalind Franklin who discovered the structure of X-ray radiation
மரபணு மற்றும் X Ray கதிர்வீச்சு வடிவமைப்பை கண்டுபிடித்த ரோசலிண்ட் ஃபிராங்கிளின் அவர்கள் பிறந்ததினம்!.
ரோசலிண்ட் எல்சி பிராங்க்ளின் (Rosalind Elsi Franklin, ஜூலை 25, 1920 - ஏப்ரல் 16, 1958) லண்டனில் பிறந்த ஒரு பிரிட்டிஷ் அறிவியலாளர். உயிர் இயற்பியல் அறிஞர், வேதியலாளர், இவர் மூலக்கூறு உயிரியல் மற்றும் எக்சு கதிர் படிக வரைவி நிபுணர் (X-ray Crystallography) என பலவகைத் துறைகளிலும் தனது திறமையை வெளிப்படுத்தியவர். மரபணு, வைரஸ், நிலக்கரி மற்றும் கிராபைட் ஆகியவற்றின் வடிவமைப்பைக் கண்டுபிடிப்பதில் பெரும் பங்காற்றியவர்.

திரு.செம்மங்குடி சீனிவாச ஐயர் அவர்கள் பிறந்ததினம்!.
கர்நாடக இசை கலைஞர், சங்கீத மகாவித்வான் திரு.செம்மங்குடி சீனிவாச ஐயர் அவர்கள் பிறந்ததினம்!.
மிகச்சிறந்த கர்நாடக இசைப்பாடகர் செம்மங்குடி சீனிவாச ஐயர் 1908ஆம் ஆண்டு ஜூலை 25 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டம் திருவிடைமருதூர் அருகே திருக்கோடிக்காவலில் பிறந்தார்.
இவர் திருவிடைமருதூர் சகாராமா ராவ், உமையாள்புரம் சுவாமிநாதன், நாராயணசுவாமி, மகாராஜபுரம் விஸ்வநாதன் ஆகியோரிடம் பயிற்சி பெற்றார். இவர் தனது முதல் இசை நிகழ்ச்சியை 1926ஆம் ஆண்டு கும்பகோணத்தில் அரங்கேற்றினார்.
மேலும், 1927ஆம் ஆண்டு சென்னையில் நடந்த இந்திய தேசிய காங்கிரஸ் மாநாட்டில் பாடிய பிறகு, பிரபலமானார். இவரை அனைவரும் 'செம்மங்குடி மாமா' என்று அழைத்தனர்.
சங்கீத கலாநிதி விருது, சங்கீத நாடக அகாடமி விருது, பத்ம பூஷண், பத்ம விபூஷண், இசைப் பேரறிஞர், காளிதாஸ் சம்மான் உட்பட பல விருதுகளைப் பெற்றுள்ளார்.
அதிக மேடைகளில் பாடி சங்கீத மகாவித்வான் என்று போற்றப்பட்ட செம்மங்குடி சீனிவாச ஐயர் 2003ஆம் ஆண்டு அக்டோபர் 31 ஆம் தேதி அன்று மறைந்தார்.
English Summary
On the birthday of Rosalind Franklin who discovered the structure of X-ray radiation