'பாகிஸ்தான் பயங்கரவாதிகளையும்,தேச விரோத சக்திகளையும் காங்கிரஸ் ஆதரிக்கிறது': பிரதமர் மோடி குற்றச்சாட்டு..!
PM Modi accuses Congress of supporting Pakistani terrorists and anti national forces
காங்கிரஸ் கட்சி, இந்திய ராணுவத்தை நம்பாமல், பாகிஸ்தான் பயங்கரவாதிகளை பாதிப்பதோடு, ஊடுருவல்காரர்களையும், தேச விரோத சக்திகளையும் பாதுகாக்கிறது என பிரதமர் நரேந்திர மோடி குற்றம் சாட்டியுள்ளார்.
மிசோரம், மணிப்பூர் மாநிலங்களைத் தொடர்ந்து அசாம் மாநிலத்திற்கு சென்றுள்ள பிரதமர் மோடி, அங்கு நேற்று பல்வேறு வளர்ச்சித் திட்டப்பணிகளை தொடங்கி வைத்துள்ளார். அங்குள்ள தர்ராங் மாவட்டத்தில் ரூ.6,300 கோடி மதிப்பிலும், நுமாலிகர் மாவட்டத்தில் ரூ.12,200 கோடி மதிப்பிலும் வளர்ச்சித் திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டியும் உள்ளார். இதனை தொடர்ந்து அங்கு நடந்த பொதுக் கூட்டங்களில் அவர் பேசியதாவது:

'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் போது, பாகிஸ்தானில் பயங்கரவாத கட்டமைப்புகளை அழித்த இந்திய ராணுவத்தை ஆதரிக்காமல், அதற்கு பதிலாக பாகிஸ்தானால் வளர்க்கப்படும் தீவிரவாதிகளை காங்கிரஸ் ஆதரிக்கிறது என்று விமர்சித்துள்ளார். அத்துடன், ஊடுருவல்காரர்களையும், தேச விரோத சக்திகளையும் பாதுகாப்பதில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. என்று குற்றம் சுமத்தியுள்ளார்.
காமாக்யா அன்னையின் ஆசீர்வாததால் ஆபரேஷன் சிந்தூரில் நமக்கு வெற்றி கிடைத்துள்ளதாகவும், இந்த மண்ணின் மைந்தனான சமூக சீர்த்த பாடகரும், நடனக் கலைஞருமான பூபன் ஹசாரிகாவுக்கு கடந்த 2019-இல் பாரத ரத்னா விருது வழங்கப்பட்டது. அதை அவமதிக்கும் வகையில் காங்கிரஸ் மூத்த தலைவர் ஒருவர், 'பாஜ கட்சி கூத்தாடிகளை கவுரவிக்கிறது' என கூறியிருக்கிறார்.
1962-ஆம் ஆண்டு சீன ஆக்கிரமிப்பின் போது அசாம் மக்களுக்கு நேரு ஏற்படுத்திய காயங்கள் இன்னும் ஆறவில்லை. பூபன் ஹசாரிகாவுக்கு ஏற்பட்ட இந்த அவமானம் காயத்தில் உப்பு தடவுவது போன்றது என்று சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், ஊடுருவல்காரர்கள் ஆக்கிரமித்த நிலங்களிலிருந்து அவர்களை விரட்டியடித்து, விவசாயிகள் அந்த நிலங்களில் விவசாயம் செய்ய முடியும் என்பதை உறுதி செய்ததற்காக அசாம் முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மாவை பாராட்டுவதாக கூறியுள்ளார்.
ஒரு காலத்தில் சட்டவிரோதமாக ஆக்கிரமிக்கப்பட்ட நிலங்கள் இப்போது விவசாயிகள் மற்றும் பழங்குடி மக்களின் கைகளில் விவசாயப் புரட்சியைக் காண்கின்றன என்றும் பெருமிதமாக குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்து அவர் கூறுகையில், சட்டவிரோதமாக ஊடுருவுபவர்கள் நிலத்தை அபகரிக்க, பெண்கள் மற்றும் சிறுமிகளை அவமதிக்க, தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக மக்கள் தொகையை மாற்றியமைக்கும் சதியை பாஜ ஒருபோதும் அனுமதிக்காது என்றும் திட்டமட்டமாகி குறிப்பிட்டுள்ளார். இன்று, வளர்ந்த இந்தியாவை உருவாக்க முழு தேசமும் ஒற்றுமையுடன் முன்னேறி வருகிறதாகவும், வளர்ந்த இந்தியா என்பது நாட்டு மக்களின் கனவு மற்றும் தீர்மானம். அதை நாங்கள் நிறைவேற்றுவோம் என்று அசாமில் பிரதமர் மோடி பேசியுள்ளார்.
English Summary
PM Modi accuses Congress of supporting Pakistani terrorists and anti national forces