புகைப்பிடிப்பவர்களுக்கு எச்சரிக்கை: ஆண்டுக்கு 13.5 லட்சம் இந்தியர்கள் உயிரிழப்பு: ஆய்வில் வெளியான அதிர்ச்சி தகவல்..!
1350 000 million Indians die every year due to smoking
இந்தியா ஆண்டுதோறும் புகையிலை தொடர்பான நோய்களுக்காக ஆண்டுக்கு 13.5 லட்சம் பேர் உயிரிழப்பதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. இது குறித்து மருத்துவ நிபுணர்கள் தெரிவித்துள்ளதாவது:
புகைப்பழக்கத்துக்கு எதிராக பரவலான விழிப்புணர்வு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டாலும் புகைப்பவர்கள் எண்ணிக்கை குறையவில்லை எனவும், இந்தியாவை பொறுத்தவரை ஆண்டுக்கு 13.5 லட்சம் பேர் புகைப்பதால் உயிரிழக்கின்றனர் எனவும்,ஆண்டுதோறும் புகையிலை தொடர்பான நோய்களுக்காக ரூ.1.77 லட்சம் கோடிக்கு மேல் செலவிடப்படுவதாக குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், புகைப்பிடிப்பதை விட புகையற்ற எரியாத நிகோடின் குறைந்த அளவு அபாயங்களை கொண்டுள்ளது என்பது அறிவியல் ஆய்வுகள் மூலம் தெரிய வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர். உலகம் முழுவதும் தற்போது புகைக்கும் சிகரெட்டுக்கு பதிலாக மெல்லும் நிகோடின் பைகள் பரவலாக தொடங்கி உள்ளன. ஆனால், நிகோடின் பைகளால் அறவே ஆபத்து இல்லை என கூற முடியாது என மருத்துவ வல்லுநர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
English Summary
1350 000 million Indians die every year due to smoking