பெண்களின் பாதுகாப்பை சூறையாடும் திமுக; சீருடையணிந்த பெண்களுக்குக் கூட பாதுகாப்பில்லை; நயினார் நாகேந்திரன் விமர்சனம்..!
Nainar Nagendran criticizes that even women are not safe under the DMK regime despite them being in power
''பெண்களின் பாதுகாப்பை சூறையாடும் திமுகவை வரும் தேர்தலில் விரட்டியடிப்பது ஒன்றே தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றுவதற்கான ஒரே வழி'' என்று தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார்.
இது குறித்து நயினார் நாகேந்திரன் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது;-
''ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடிக்கு வருகை புரிந்த முதல்வருக்குப் பாதுகாப்பு அளிக்கச் சென்ற பெண் காவலர்களைக் கழிவறையில் செல்போன் மூலம் சிறப்பு காவல் உதவி ஆய்வாளர் முத்துப்பாண்டி காணொளி எடுத்ததாக வெளிவந்துள்ள செய்தி மிகுந்த அதிர்ச்சியளிக்கிறது.
தான் பங்கேற்ற அரசு விழாவில், சீருடையணிந்த பெண்களுக்குக் கூட இம்மியளவும் பாதுகாப்பில்லாத அளவிற்கு சட்டம் ஒழுங்கைச் சீரழித்துள்ள கேவலபட்ட ஆட்சியை நடத்தி வரும் முதல்வர் மு.க. ஸ்டாலின் தமது துருப்பிடித்த இரும்புக்கரத்தைக் கொண்டு முகத்தை மூடிக்கொள்ள வேண்டும்! ஆட்டு மந்தையில் ஓநாய் புகுந்தது போல, ஆட்சிப் பொறுப்பேற்ற நாள் முதல், பெண்களின் பாதுகாப்பை சூறையாடும் திமுகவை வரும் தேர்தலில் விரட்டியடிப்பது ஒன்றே தமிழகத்தை அமைதிப் பூங்காவாக மாற்றுவதற்கான ஒரே வழி” என்று பதிவிட்டுள்ளார்.
English Summary
Nainar Nagendran criticizes that even women are not safe under the DMK regime despite them being in power