அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி மீண்டும் போராட்டம்; களத்தில் இறங்கிய புதிய சங்கம்..!
A new union has entered the protest arena demanding that the government fulfill the demands of government employees and teachers
'ஜாக்டோ-ஜியோ' என்பது அரசு ஊழியர், ஆசிரியர்களின் பல்வேறு சங்கங்களின் கூட்டு நடவடிக்கைகளுக்கான கு அமைப்பாகும். இந்த அமைப்பு அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பல்வேறு கோரிக்கைகளை அரசு நிறைவேற்ற வலியுறுத்தி தொடர்ந்து போராட்டக்களத்தில் ஈடுபட்டு வருகிறது. பல ஆண்டுகளாகவே, ஆளும் அரசையும், எதிர்க்கட்சிகளையும் அணுகி கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் 'ஜாக்டோ-ஜியோ' அமைப்புக்கு எதிராக அந்த அமைப்பின் செயல்பாடுகளில் திருப்தி இல்லாத அரசு ஊழியர்கள், ஆசிரியர்களை உறுப்பினர்களாக கொண்டு 'போட்டா-ஜியோ' என்ற அமைப்பு உருவாக்கப்பட்டது. சமீபத்தில் குறித்த 02 அமைப்புகளும் அரசு ஊழியர்கள், ஆசிரியர்களின் பிரதான கோரிக்கையான பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்தக் கோரி காலவரையற்ற வேலைநிறுத்தத்தை அறிவித்தனர்.
இவர்களிடம் அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு, உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டம் தொடர்பான அறிவிப்பு வெளியிடப்பட்டது. இதனையடுத்து வேலைநிறுத்த போராட்ட அறிவிப்பை கைவிட்டனர். இந்த சூழலில், ஜாக்டோ-ஜியோ, போட்டா-ஜியோவைத் தொடர்ந்து புதிதாக ஆக்டோ-ஜியோ (ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர் இயக்கங்களின் நடவடிக்கைக் குழு) என்ற புதிய அமைப்பு உருவாக்கப்பட்டிருக்கிறது.
இந்த அமைப்பு ஏற்கனவே அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் முன்வைத்திருந்த பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தை அறிவித்துள்ளனர். அதன்படி, வருகிற 3-ந்தேதி முதல் காலவரையற்ற வேலைநிறுத்தத்தில் ஈடுபடப்போவதாக குறிப்பிட்டுள்ளனர்.
புதிய அமைப்புகள் தொடர்ந்து உருவாகுவதால், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் எந்த அமைப்புடன் இணைந்து போராட்டத்தை முன்னெடுப்பது என தெரியாமல் குழப்பத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.
English Summary
A new union has entered the protest arena demanding that the government fulfill the demands of government employees and teachers