தமிழ்நாடு அரசின் புதிய செம்மொழி இலக்கிய விருதில் ஹிந்திக்கு இடமில்லை..!
Hindi has no place in the Tamil Nadu governments new Classical Language Literary Award
"செம்மொழி இலக்கிய விருது" என்ற புதிய தேசிய விருதை தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது. தமிழ்மொழி மட்டுமின்றி பிற இந்திய மொழிகளின் இலக்கியப் பங்களிப்புகளையும் அங்கீகரிக்கும் வகையில் இந்த விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு பன்னாட்டுப் புத்தகக் கண்காட்சி நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இதை அறிவித்தார். சாகித்ய அகாடமி விருதுகளில் அரசியல் தலையீடு இருப்பதை விமர்சித்து, இந்த மாற்று ஏற்பாடு என குறிப்பிட்டுள்ளார்.
இதன் கீழ், முதற்கட்டமாக தமிழ் உட்பட 07 மொழிகளின் (தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், ஒடியா, வங்காளம், மராத்தி) சிறந்த படைப்புகளுக்கு ஆண்டுதோறும் ரூ.5 லட்சம் பரிசுத்தொகையுடன் விருது வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.
அதன்படி, வெளிப்படைத்தன்மையுடன் விருதுகளைத் தேர்வு செய்ய, ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாகச் சிறந்த எழுத்தாளர்களைக் கொண்ட தன்னாட்சி பெற்ற தேர்வுக் குழுக்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆனால், புதிய "செம்மொழி இலக்கிய விருது" அறிவிப்பில் ஹிந்தி மொழி இடம்பெறாதது பேசும் பொருளாகியுள்ளது. மத்திய அரசின் ஹிந்தி திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில், மோதல்கள் வலுத்து வரும் நிலையில் தற்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இதற்கு முன்னதாக, "கலைஞர் மு. கருணாநிதி செம்மொழித் தமிழ் விருது" தகுதியுள்ள தமிழறிஞர்களுக்கு வழங்கப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது.
English Summary
Hindi has no place in the Tamil Nadu governments new Classical Language Literary Award