தமிழக வெற்றிக் கழகத்துடன் கூட்டணி உறுதி..? சூட்சுமமாக பதிலளித்த ஓபிஎஸ்..!
OPS responds subtly to alliance with TVK
அதிமுகவின் முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் திண்டுக்கல்லில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்துள்ளார். அப்போது செங்கோட்டையன் விரைவில் நல்ல செய்தி சொல்வார். சசிகலாவை சந்திக்க வாய்ப்புள்ளது, விரைவில் சந்திப்பேன் என்று கூறியுள்ளார்.
அத்துடன், டிடிவி.தினகரன், செங்கோட்டையன் ஆகியோரையும் சந்திக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். அப்போது தமிழக வெற்றிக் கழகத்தின் முதலாவது தேர்தல் பரப்புரை குறித்து கேள்வி எழுப்பப்பட்டதற்கு அவர் கூறியதாவது:
விஜய் பிரசாரத்தில் மின்சாரம் இல்லை என்ற குற்றச்சாட்டு வரவில்லை. ஆனால், அவருடன் கூட்டணியா என கேட்கிறீர்கள். எதிர்காலத்தில் எதுவும் நடக்கலாம், அது நல்லதாகவே நடக்கும் என்று சூட்சுமமாக பதிலளித்துள்ளார்.

மேலும் தற்போதைக்கு டெல்லி செல்வதற்கு பயணங்கள் இல்லை என்றும், பாஜ மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் 02 நாட்களுக்கு முன்பு தொலைபேசி மூலம் என்னுடன் பேசினார். சந்திக்க வேண்டும் என கூறியுள்ளார். உறுதியாக சந்திப்போம் தான் கூறியுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
மேலும், முதல்வர் வேட்பாளர் எடப்பாடி பழனிசாமியை மாற்றினால் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு வர வாய்ப்புள்ளது என டிடிவி.தினகரன் கூறியது பற்றி கேட்கப்பட்ட கேள்விக்கு, இது குறித்து டிடிவி.தினகரனிடம் தான் கேட்க வேண்டும் என்று பதிலளித்துள்ளார்.
English Summary
OPS responds subtly to alliance with TVK