அன்புக்கரங்கள்’ திட்டம்....இன்று தொடங்கி வைக்கிறார் மு.க.ஸ்டாலின்!
The Anbu Karangal scheme is being launched today by M K Stalin
கலைவாணர் அரங்கத்தில் மாதம் ரூ.2 ஆயிரம் வழங்கும் ‘அன்புக்கரங்கள்’ திட்டத்தை தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு உதவித்தொகையை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்க உள்ளார்.
இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-“தமிழ்நாடு அரசின் ‘தாயுமானவர்’ திட்டத்தின் ஒரு பகுதியாக, பெற்றோர் இருவரையும் இழந்த மற்றும் பெற்றோரில் ஒருவரை இழந்து மற்றொரு பெற்றோரால் பராமரிக்க இயலாத குழந்தைகளை அரவணைத்து தொடர்ந்து பாதுகாத்திடும் வகையில், ‘அன்புக்கரங்கள்’ திட்டம் தமிழ்நாடு அரசால் அறிவிக்கப்பட்டது.
ஏற்றமிகு தமிழ்நாட்டை உருவாக்கிட, குழந்தைகளின் கல்வி மற்றும் அவர்களின் சீரான வளர்ச்சிக்கு தமிழ்நாடு அரசு பல்வேறு திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. மிகவும் வறுமையில் வாழும் குடும்பங்களை அடையாளம் கண்டு அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதற்காக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது இந்த அன்புக்கரங்கள்’ திட்டம்.
இந்த திட்டத்தில் அந்த குழந்தைகளின் 18 வயது வரையிலான பள்ளிப்படிப்பு முடியும் வரை இடைநிற்றல் இன்றி கல்வியை தொடர மாதம் ரூ.2 ஆயிரம் உதவித்தொகை வழங்குவதுடன், பள்ளிப்படிப்பு முடித்த பின்னர் கல்லூரி கல்வி மற்றும் உரிய திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அவர்களுக்கு வழங்க வழிவகை செய்யும் இத்திட்டத்தை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (திங்கட்கிழமை) சென்னை கலைவாணர் அரங்கத்தில் தொடங்கி வைத்து குழந்தைகளுக்கு உதவித்தொகையை வழங்க உள்ளார். மேலும், பெற்றோர் இருவரையும் இழந்து 12-ம் வகுப்பு முடித்து, பல்வேறு உயர்கல்வி நிறுவனங்களில் தமிழ்நாடு அரசின் முயற்சியால் சேர்க்கப்பட்டுள்ள மாணவ, மாணவிகளுக்கு மடிக்கணினிகளும் வழங்க உள்ளார்.”இவ்வாறு தமிழ்நாடு அரசு வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
English Summary
The Anbu Karangal scheme is being launched today by M K Stalin