நோயாளியுடன் நெருக்கமான உறவு - செவிலியர் மீது அதிரடி நடவடிக்கை.! - Seithipunal
Seithipunal


நோயாளியுடன் நெருக்கமான உறவு - செவிலியர் மீது அதிரடி நடவடிக்கை.!

பிரிட்டன் நாட்டில் உள்ள வேல்ஸ் பகுதியில் உள்ள மருத்துவமனை ஒன்றில் பெனலோப் வில்லியம்ஸ் என்ற செவிலியர் பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில், காரில் நோயாளி ஒருவர் இறப்பதற்கு காரணம் என்ற குற்றச்சாட்டுக்கு ஆளானார்.

இந்தக் குற்றச்சாட்டுத் தொடர்பாக போலீசார் பெனலோப்பிடம் நடத்திய விசாரணையில், நோயாளி காரில் இருந்தபடி அவசரமாக அழைப்பு விடுத்ததால் அங்கு சென்றதாகவும், காரின் பின் இருக்கையில் அமர்ந்து அரைமணி நேரம் பேசிக்கொண்டிருந்ததாகவும், அப்போது நோயாளிக்கு மாரடைப்பு ஏற்பட்டு இறந்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

இருப்பினும், நோயாளியின் மருத்துவக் கூராய்வு மற்றும் மருத்துவமனை வளாகத்தில் போலீஸார் நடத்திய விசாரணை உள்ளிட்டவை வெவ்வேறு காரணங்களைக் வெளிக்கொண்டு வந்தன. அதாவது, கூடாரம் சாட்டப்பட்ட பெனலோப் சிறுநீரகங்கள் பாதிக்கப்பட்டு டயாலிசிஸ் சிகிச்சை பெற்று வந்த நோயாளியுடன் சுமார் ஒரு வருட காலமாக நெருக்கமான உறவில் இருந்ததாகவும், இது குறித்து சக பணியாளர்கள் அவரை பலமுறை எச்சரித்ததும் தெரிய வந்தது.

மேலும், பெனலோப் சம்பவத்தன்று காரின் பின் இருக்கையில் வைத்து நோயாளியுடன் உடலுறவில் ஈடுபட்டிருந்த போது, நோயாளிக்கு மாரடைப்பு ஏற்பட்டதும், அப்போது பெனலோப் ஒரு மருத்துவப் பணியாளராக அவசர உதவி மற்றும் ஆம்புலன்ஸ் தேவையை நாடாது, சக பணியாளரை மட்டுமே உதவிக்கு கோரி உள்ளார். 

அந்த பணியாளர் எடுத்துச் சொல்லியும் பெனலோப் நோயாளிக்கு அவசரகால மருத்துவ உதவிக்கு முயற்சி செய்யாமல், தனக்கு பிரச்சினை ஏற்படாது அதிலிருந்து தப்பிப்பதிலேயே இருந்துள்ளார். இதில் அந்த நோயாளி சிகிச்சைக்கு கிடைக்காமல் பரிதாபமாக உயிரிழந்துள்ளார் என்பது தெரிய வந்தது.

சம்பவம் தொடர்பாக போலீஸார் நடத்திய தீவிர விசாரணையில் உண்மைகள் அனைத்தும் வெளிப்பட்டதையடுத்து, செவிலியர் பெனலோப் அரசு பணியில் இருந்து நீக்கப்பட்டு காவல் துரையின் விசாரணைக்குத் தொடர்ந்து ஆளாகியுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nurse arrested over affair with patient died during in sex in british hospital


கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...



Advertisement

கருத்துக் கணிப்பு

அதிமுக-பாஜக கூட்டணி முரணானது என்ற விமர்சனம்...




Seithipunal
--> -->