வங்கியில் ரூ. 13,000 கோடி மோசடி; லண்டன் சிறையிலுள்ள நீரவ் மோடி விரைவில் நாடு கடத்தப்பட ஏற்பாடு..? - Seithipunal
Seithipunal


உலகின் முன்னணி வைர வியாபாரிகளில் ஒருவரான நீரவ் மோடி, பஞ்சாப் நேஷனல் வங்கியில் பல்வேறு காலக்கட்டங்களில் போலியான ஆவணங்களை பயன்படுத்தி சுமார் 13,000 கோடி ரூபாய் கடன் பெற்று மோசடியில் ஈடுபட்டுள்ளார்.  

இதனை தொடர்ந்து கடந்த 2018-ஆம் ஆண்டு இங்கிலாந்திற்கு தப்பியோடிய நிலையில், 2019-ஆம் ஆண்டு லண்டனில் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளார். இந்தச் சூழலில்தான், நீரவ் மோடியை இந்தியாவுக்கு நாடு கடத்த சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை கடந்த சில ஆண்டுகளாக தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன. 

அதன்படி, இந்தியாவின் கோரிக்கையை ஏற்று, அவரை நாடு கடத்த இங்கிலாந்து நீதிமன்றங்கள் ஏற்கனவே அனுமதி வழங்கியுள்ளது.. எனினும், தான் நாடு கடத்தப்படுவதை எதிர்த்து, நீரவ் மோடி இங்கிலாந்தில் பல்வேறு நீதிமன்றங்களில் மேல்முறையீடு செய்திருந்தார். ஆனாலும் அவரின் அனைத்து மனுக்களும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில், கடந்த ஏப்ரல் மாதம் ''தான் இந்தியாவிற்கு நாடு கடுத்தப்பட்டால் அங்கு துன்புறுத்தப்படுவேன்” என லண்டனில் உள்ள மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்திருந்தார். எனினும், அந்த மனுவும் தற்போது தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக இங்கிலாந்தில் அவரது அனைத்து சட்ட வாய்ப்புகளும் முடிவுக்கு வந்துள்ளது.  இதன் காரணமாக அவர் இந்தியாவுக்கு நாடு கடத்தலுக்கு இருந்த முக்கிய சட்டத் தடைகள் நீங்கியுள்ளது.

இதையடுத்து, இங்கிலாந்து அரசின் இறுதி நிர்வாக நடைமுறைகள் நிறைவடைந்த பிறகு, நீரவ் மோடி இந்தியாவிடம் ஒப்படைக்கப்படலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Nirav Modi who is in a London jail in a fraud case is set to be extradited soon


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->