பூமியை விழுங்க போகும் சூரியன்; சூரியனின் மையத்தில் ஹைட்ரஜன் எரிபொருள் தீர்ந்துவிடும் அபாயம்; ஆய்வில் அதிர்ச்சி தகவல்..! - Seithipunal
Seithipunal


பெல்ஜியத்தின் KU Leuven பல்கலைக்கழக வானியல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த ஆய்வாளர் மாட்ஸ் எசெல்டியர்ஸ் தலைமையிலான சர்வதேச ஆராய்ச்சியாளர் குழு மேற்கொண்டது. இந்த ஆய்வு Astronomy & Astrophysics அறிவியல் இதழில் வெளியாகியுள்ளது.

இந்த ஆய்வில் விஞ்ஞானிகளின் கணிப்பின்படி, இன்னும் சுமார் 500 கோடி ஆண்டுகளுக்குப் பிறகு, சூரியனின் மையத்தில் ஹைட்ரஜன் எரிபொருள் தீர்ந்துவிடும் என்று கூறப்பட்டுள்ளது. அதன் பிறகு சூரியன் தற்போதைய அளவை விட பல நூறு மடங்கு பெரிதாக விரிந்து முதலில் Red Giant ஆகவும், பின்னர் AGB நட்சத்திரமாகவும் மாறும் என்று தெரிவித்துள்ளனர்.

அத்துடன், இறுதியில் அதன் வெளிப்புற அடுக்குகள் அனைத்தும் சிதறி, White Dwarf எனப்படும் சிறிய ஆனால் மிகவும் அடர்த்தியான நட்சத்திரமாக சுருங்கிவிடும் என்று விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர்.

இதுவரை, இந்த கட்டத்தில் சூரியன் மிகப்பெரிய அளவுக்கு விரிவடைந்து புதன், வெள்ளி மற்றும் பூமி ஆகிய கோள்களை முழுமையாக விழுங்கிவிடும் என்று விஞ்ஞானிகள் நம்பி வந்தனர். ஆனால், இந்த புதிய ஆய்வு அந்த கணிப்பில் மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. 

சூரியனைப் போன்ற இறுதி கட்டத்தில் இருக்கும் L2 Puppis என்ற நட்சத்திரத்தை ஆய்வு செய்ததுடன், பல்வேறு கணினி மாதிரிகளையும் பயன்படுத்தி ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர். அதன் அடிப்படையில், பூமியின் எதிர்காலம் இரண்டு காரணிகளுக்கு இடையிலான சமநிலையைப் பொறுத்தே அமையும் என்று தெரிவித்துள்ளனர்.

ஒரு சூழலில், சூரியன் பெரிதாக விரிவடையும்போது அதன் ஈர்ப்பு விசை பூமியை தன்னருகே இழுத்துச் சென்று இறுதியில் விழுங்கிவிடும் என்று கணித்துள்ளனர். ஆனால் மற்றொரு வாய்ப்பில், சூரியன் தனது வெளிப்புற அடுக்குகளை வேகமாக இழப்பதால் அதன் மொத்த நிறை குறையும் என்றும், இதன் காரணமாக ஈர்ப்பு விசையும் பலவீனமடைந்து, பூமி மெதுவாக சூரியனிலிருந்து தொலைவான சுற்றுப்பாதைக்கு நகர்ந்து தப்பிக்கக்கூடும் என்று தெரிவித்துள்ளனர்.

இந்த ஆய்வின் ஆசிரியர் மாட்ஸ் எசெல்டியர்ஸ் தெரிவித்துள்ளதாவது; "சூரியனின் ஈர்ப்பு விசை மேலோங்குகிறதா அல்லது அதன் நிறை இழப்பு அதிகமாகிறதா என்பதை பொறுத்தே பூமியின் எதிர்காலம் தீர்மானிக்க்கப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.அத்துடன், ஈர்ப்பு விசை மேலோங்கினால் பூமி விழுங்கப்படும் என்றும், ஆனால் நிறை இழப்பு அதிகமாக இருந்தால், பூமி சூரியனிலிருந்து விலகி உயிர் பிழைக்கும் வாய்ப்பு உள்ளது என்று தெரிவித்துள்ளார்.

இந்த ஆய்வு, பூமியின் எதிர்காலம் குறித்து இதுவரை நிலவி வந்த கருத்துகளுக்கு புதிய பரிமாணத்தை அளித்துள்ளதுடன், சூரியக் குடும்பத்தின் நீண்டகால பரிணாம வளர்ச்சியைப் பற்றிய ஆய்வுகளுக்கும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Shocking study reveals that the suns core is in danger of running out of hydrogen fuel


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->