பிரதமருக்கு திடீர் நெஞ்சுவலி.! காத்மாண்டு மருத்துவமனையில் அனுமதி.!  - Seithipunal
Seithipunal


நேபாள பிரதமராக இருக்கும் கேபி சர்மா ஒலிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார். 

கடந்த சில மாதமாக நேபாள பிரதமர் கேபி சர்மா ஒலி  இந்தியாவிற்கு எதிராக பேசி வருகின்றார். எனவே, அவருடைய கட்சியில் இருக்கும் பலரும் அவருக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

மேலும் கட்சியின் மூத்த தலைவர்கள் பலரும் இவரை கட்சியில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் என்று கூறி வருகின்றனர். நேற்று நேபாள பிரதமராக இருக்கும் கேபி சர்மா ஒலிக்கு திடீர் நெஞ்சுவலி ஏற்பட்டு இருக்கின்றது. 

இதனைத் தொடர்ந்து அவர் காத்மாண்டுவில் இருக்கும் மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். தற்போது அவர் உடல் நிலை சீராக இருப்பதாக கூறி மருத்துவர்கள் அவரை வீட்டிற்கு அனுப்பிவைத்துள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

nepal pm affected by heart attack


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் இருமொழி கொள்கை தான் என முதலமைச்சர் அறிவித்திருப்பது..
Seithipunal