பூமியை வந்தடைந்த குறுங்கோள் மண்துகள்கள்! அசத்திய நாசா!  - Seithipunal
Seithipunal


அமெரிக்கா மத்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா ஆஸ்டிராய்ட் என்ற சூரியனைச் சுற்றும்  குறுங்கோள்களை ஆராய்ச்சி செய்வதில் பல வருடங்களாக ஈடுபட்டு வருகிறது. 

அமெரிக்காவின் புளோரிடா மாநிலத்தில் இருந்து ஓசிரிஸ்-ஆர்ஈஎக்ஸ் என்னும் விண்கலனை கடந்த 2016 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் பூமியிலிருந்து 200 மில்லியன் மைல்களுக்கு மேல் உள்ள பென்னு என்னும் குறுங்கோளை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் மத்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசா அனுப்பியிருந்தது. 

மேலும் குறுங்கோளிலில் இருந்து ஆராய்ச்சிகளுக்காக மாதிரி படிவங்கள் பூமிக்கு கொண்டு வரவும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 

பென்னுவின் மேற்பரப்பில் ஆய்வு செய்வதற்காக விண்கலத்தில் இருந்து அனுப்பப்பட்ட ஆய்வு சாதனம் 2020 ஆம் ஆண்டு பென்னுவை சென்றடைந்தது. 

பாறைகள் நிறைந்த குறுங்கோளின் மேற்பரப்பிலிருந்து 250 கிராம் எடை கொண்ட மண் துகள்களை அந்த சாதனம் எடுத்து மிகச் சிறிய மற்றொரு விண்கலம் மூலம் திருப்பி அனுப்பப்பட்டது. 

சிறிய விண்கலன் 6.21 பில்லியன் கிலோமீட்டர் பயணம் செய்து நேற்று அமெரிக்காவின் உடா மாநிலத்தில் உள்ள பாலைவனத்தில் தரையிறங்கியது. 

இதனை நாசா அதிகாரிகள் பத்திரமாக மீட்டனர். பூமியை நோக்கி விண்கலனிலிருந்து அதிவேகமாக வந்த கேப்ஸ்யூல் வளிமண்டலத்தை தாண்டியதும் அதில் இணைக்கப்பட்டு இருந்த பாராசூட் மூலம் மெதுவாக பூமியை தொட்டது. 

நாசாவின் இந்த முயற்சி குறித்து மகிழ்ச்சி தெரிவித்த அதன் தலைவர் பில் நெல்சன், சூரிய மண்டல ஆராய்ச்சிக்கு விஞ்ஞானிகளின் ஒரு புதிய பார்வை கிடைக்க இந்த ஆராய்ச்சி வழி காட்டும் என தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

nasa succeeds bringing major asteroid sample


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->