திரு.ஜாக்குவஸ் மோனாட் அவர்கள் நினைவு தினம்!. - Seithipunal
Seithipunal


'மூலக்கூறு உயிரியலின் தந்தை'திரு.ஜாக்குவஸ் மோனாட் அவர்கள் நினைவு தினம்!.

 ஜாக்குவஸ் லூசியன் மோனாட் 1910ஆம் ஆண்டு பிப்ரவரி 9 ஆம் தேதி பிரான்ஸ் தலைநகர் பாரீஸில் பிறந்தார்.

 இவர் பட்டம் பெற்ற பிறகு பரிணாம வளர்ச்சி, டிஎன்ஏ, ஆர்என்ஏ மரபணுக்கள், கேலக்டோசிடேஸ் எனப்படும் என்சைம் தொகுப்புகள் குறித்த ஆராய்ச்சிகளில் ஈடுபட்டார்.

 நோய் எதிர்ப்பாற்றல் துறை வல்லுநர் மெல்வினுடன் இணைந்து செரிமான நொதியை உற்பத்தி செய்ய ஒரு உள் சமிக்ஞை தேவைபடுவதை 1943ஆம் ஆண்டு இவர்கள் கண்டறிந்தனர். இந்த ஆய்வு முடிவுகளை தொகுத்து பொதுவான தூண்டல் கோட்பாட்டை வெளியிட்டனர்.

 இவர் விஞ்ஞானி ஜேக்கப்புடன் இணைந்து புரோட்டீன் தொகுப்பு மாதிரியை உருவாக்கினார். மேலும் ஆப்ரேட்டர், கட்டமைப்பு மரபணு என்ற 2 முக்கியமான மரபணுக்களையும் கண்டறிந்தனர்.

 இவர் பிரான்கோயிஸ் ஜேக்கப், ஆண்ட்ரே லூஃப் ஆகிய ஆராய்ச்சியாளர்களுடன் இணைந்து ஜீன்கள், நொதிகளை உருவாக்குவதன் மூலம் செல்களின் வளர்சிதை மாற்றத்தை நெறிப்படுத்துவது தொடர்பான கண்டுபிடிப்புக்காக 1965ஆம் ஆண்டு இவர்கள் மூவருக்கும் மருத்துவத்திற்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.

மூலக்கூறு உயிரியலின் தந்தை எனப் போற்றப்படும் ஜாக்குவஸ் லூசியன் மோனாட் 66வது வயதில் மே 31 ஆம் தேதி 1976 அன்று மறைந்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Mr Jacques Monods memorial day


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...


செய்திகள்



Seithipunal
--> -->