சூடானில் ஆர்.எஸ்.எப்., கிளர்ச்சிப்படை தாக்குதலில் அப்பாவி பொதுமக்கள் 200க்கும் மேற்பட்டோர் பலி..!
More than 200 innocent civilians killed in RSF rebel attacks in Sudan
ஆப்பிரிக்க நாடான சூடானில் உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.அந்நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் அரசின் நிர்வாகம் இல்லை என கூறப்படுகிறது. அந்நாட்டில், ஆர்.எஸ்.எப்., எனப்படும் கிளர்ச்சிப்படை நடத்திய தாக்குதலில் பெண்கள் மற்றும் குழந்தைகள் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர்.
உள்நாட்டுப் போரில் இதுவரை 60 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர். அத்துடன், 80 லட்சம் பேர் உள்நாட்டிலேயே இடம்பெயர்ந்துள்ளனர். 34 லட்சம் பேர் பிற நாடுகளுக்கு இடம்பெயர்ந்துள்ளனர். இந்த சூழலில், அரசு ஆதரவு குழுக்களுக்கும், கிளர்ச்சிப்படைகளுக்கும் தொடர்ந்து கொடூரமான போர் நடைபெற்று வருகிறது.

சூடானின் ஒயிட் நைல் மாகாணத்தின் அல்-கிடைனா நகரை சுற்றியுள்ள பகுதிகளில் ஆர்.எஸ்.எப்., எனப்படும் கிளர்ச்சி படையினர் புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில், பெண்கள், குழந்தைகள் உட்பட 200-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக சூடான் தகவல்கள் தெரிவிக்கின்றன.
குறித்த தாக்குதல் குறித்து சட்ட வல்லுநர் குழு கூறியதாவது:
சூடானில் நடந்த மோதலின் போது பொதுமக்கள் மீதான தாக்குதல்கள் உட்பட மனித உரிமை மீறல்களை நாங்கள் உன்னிப்பாக கண்காணித்து வருகிறோம். ஆர்.எஸ்.எப்., கிளர்ச்சிப்படை, நிராயுதபாணியான பொதுமக்களைத் தாக்கி கொன்று குவிக்கிறது. இந்த தாக்குதலில் மரண தண்டனை, கடத்தல் மற்றும் சொத்து சூறையாடல் ஆகியவற்றை நடத்தி வருகிறது என குறித்த குழு கூறியுள்ளது.
English Summary
More than 200 innocent civilians killed in RSF rebel attacks in Sudan