வங்கதேச தேர்தலில் போது வன்முறை ஏற்படும் அபாயம்: முகமது யூனுஸ் அதிர்ச்சி..!
Mohammad Yunus shocked by the risk of violence during the Bangladesh elections
வங்கதேசத்தில் வரும் 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் பொது தேர்தல் நடைபெறும் என இடைக்கால அரசு அறிவித்துள்ளது. இந்த பொதுதேர்தலில் போது, வன்முறை அபாயம் ஏற்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதன்காரணமாக அனைத்து வாக்குச்சாவடிக்கும் முழுமையான பாதுகாப்பு நடவடிக்கைகள் கடைப்பிடிக்கபட வேண்டும் என்று இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ஹெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக வங்கதேச அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது:
பொதுதேர்தல் தொடர்பாக நேற்று உயர்மட்டக் கூட்டம் நடைபெற்றதில். இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முஹமது யூனுஸ், தேர்தல் நடத்தும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தியதாகவும், அப்போது, அனைத்து வாக்குச் சாவடிகளிலும் முழுமையான பாதுகாப்பை நாம் உறுதி செய்ய வேண்டும் என்றும், நாட்டின் தேர்தல் வரலாற்றில் சுதந்திரமான, நியாயமான மற்றும் அமைதியான தேர்தல் நடைமுறைக்கு இது அவசியம் என்பது குறித்து முகமது யூனுஸ் வலியுறுத்தியதாக தெரிவித்துள்ளார்.
மேலும், அரசியல் பதட்டங்கள் மற்றும் தேர்தல் நேரத்தில் வன்முறை ஏற்படும் அபாயங்கள் குறித்து முகமது யூனுஸ் கவலை தெரிவித்துள்ளதாகவும், இடைக்கால அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் மேலும் கூறப்பட்டுள்ளது.
English Summary
Mohammad Yunus shocked by the risk of violence during the Bangladesh elections