பொது இடங்களில் புகைபிடிப்பதற்கான தடையை கடுமையாக்கிய மெக்சிகோ.! - Seithipunal
Seithipunal


தென் அமெரிக்கா நாடான மெக்சிகோவில் கடந்த 2008ஆம் ஆண்டு உணவகங்கள் மற்றும் பணியிடங்களில் புகை பிடிப்பதை தடை செய்வதற்கான சட்டத்தை இயற்றி அமல்படுத்தியது. 

இந்நிலையில், 2008ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட சட்டத்தை தற்பொழுது விரிவுபடுத்தி, உணவகங்கள், சுற்றுலாத்தலங்கள், கடற்கரை, பூங்காக்கள், அலுவலகங்கள் என அனைத்து பொது இடங்களிலும் புகை பிடிப்பதற்கு தடை விதிப்பதாக மெக்சிகோ அறிவித்துள்ளது.

மேலும் புகையிலை பொருட்களின் விளம்பரம், சந்தைப்படுத்துதல் மற்றும் ஸ்பான்சர்ஷிப் ஆகியவற்றிற்கும் முழு தடை விதிக்கப்பட்டுள்ளது. அதாவது கடைகளுக்குள் சிகரெட்டுகளை கூட காட்சிப்படுத்த கூடாது என கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

இந்த கடுமையான புதிய விதிமுறைகள் வேப்ஸ் மற்றும் இ-சிகரெட்டுகளுக்கும் பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தென் அமெரிக்கா நாடுகளில் பல நாடுகள் புகையிலைக்கு தடை விதித்த போதிலும், மெக்சிகோவின் சட்டம் மிகவும் வலிமையானதாகவும் பரந்த அளவிலானதாகவும் கருதப்படுகிறது.

மேலும் மெக்சிகோவின் இந்த நடவடிக்கைக்கு பான் அமெரிக்கன் ஹெல்த் ஆர்கனைசேஷன் பாராட்டு தெரிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mexico tightens restrictions of ban on smoking in public


கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

'இந்தியா' கூட்டணியில் தலைவர்கள் ஒருவருக்கொருவர் விமர்சித்துக்கொள்வதால் தேர்தலில் பின்னடைவு ஏற்படுமா?




Seithipunal
--> -->