10 வருஷத்துக்கு முன்னாடி நடந்ததா சொல்றாங்க.. பழைய டேட்டிங் போட்டோவை பார்த்து கொலைவெறியாட்டம்.! - Seithipunal
Seithipunal


மெக்சிகோ நாட்டைச் சார்ந்தவர் ஜூலியட். இவரது மனைவி லியோனோரா. இவர்கள் இருவரும் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்த நிலையில், தனது கணவர் ஜூலியட் பெண் ஒருவரிடம் தனிமையில் இருக்கும் அந்தரங்க புகைப்படம் மற்றும் வீடியோவை லியோனோரா பார்த்துள்ளார். 

இதனால் கோபத்தின் உச்சிக்கு சென்று மனைவி, கணவனிடம் சென்று என்ன நடந்தது? அது யார்? என்று கூட விசாரிக்காமல், சமையல் செய்யும் கத்தியை எடுத்து கை, கால்களை கத்தியால் குத்தியுள்ளார். கத்திக்குத்து வாங்கிய ஜூலியட், மனைவியை தடுத்து நிறுத்தி எந்த புகைப்படம்? எந்த வீடியோ? என்று கேட்டுள்ளார். 

இதனையடுத்து மனைவி அலைபேசியில் இருந்த புகைப்படம் மற்றும் வீடியோ காட்சிகளை காண்பிக்கவே, வலியால் துடித்த ஜூலியட் சிரிக்கவும் முடியாமல், அழவும் முடியாமல் தவித்துள்ளார். இதன்பின்னர், என்னவென்று விசாரணை செய்தபோது, அந்த வீடியோ மற்றும் புகைப்படத்தில் இருப்பது நீதான் என்று கூறியுள்ளார். 

மேலும், இவை அனைத்தும் நீயும் - நானும் டேட்டிங் செய்தபோது எடுத்துக்கொண்டவை, கடந்த 10 வருடங்களுக்கு முன்னதாக இவை எடுக்கப்பட்டது என்று தெரிவித்துள்ளார். அரைகுறையாக புகைப்படத்தை பார்த்து ஆத்திரத்தில் தவறு இளைத்துவிட்டேன் என்று கணவனிடம் மன்னிப்பு கேட்டுள்ளார். 

இதற்குள்ளாக, ஜூலியட்டின் அலறல் சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அக்கம் பக்கத்தினர் காவல்துறையினருக்கு தகவல் தெரிவிக்கவே, காவல்துறையினரால் லியோனோரா கைது செய்யப்பட்டுள்ளார். கத்திக்குத்து காயத்துடன் உயிருக்கு போராடிய ஜூலியட் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இது தொடர்பான விசாரணை நடைபெற்று வருகிறது. 

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Mexico Husband Murder Attempt by wife due to Doubts of Affair Mobile Old Dating Pics


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal