ரூ.62 லட்சத்துக்கு பழைய Levi'S ஜீன்ஸை ஏலத்தில் எடுத்த நபர்.! இதோ முழு விவரம்.!
Levis jeans Sold for 62 M
மெக்சிகோவில் ₹.62 லட்சத்துக்கு பழைய லெவிஸ் ஜீன்ஸ் ஏலம் விடப்பட்டுள்ளது.
நியூ மெக்சிகோவில் நடைபெற்ற ஏலத்தில் 1800 ஆம் ஆண்டுகளில் லெவி'ஸ் ஜீன்ஸ் 76,000 டாலருக்கு (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.62 லட்சத்திற்க்கும் மேல்) விற்கப்பட்டுள்ளது. அத்துடன் இதை வாங்குபவர் பிரீமியம் தொகையாக மொத்தமாக 87,400 டாலர்களை செலுத்தியுள்ளார்.

மெக்சிகோவின் சான் டியாகோ பகுதியைச் சேர்ந்த 23 வயது கைல் ஹவுபெட் என்ற நபர் கடந்த அக்டோபர் 1 ஆம் தேதி நடைபெற்ற ஏலத்தில் 1800 ஆம் ஆண்டிற்கான ஜீன்ஸ் பேண்ட்டை வாங்கியுள்ளார்.
இதுகுறித்து அந்த ஜீன்ஸ் பேண்ட்டை வாங்கியவர், "நான் இதை வாங்கியது குறித்து இன்னும் ஒருவித குழப்பத்தில் தான் இருக்கிறேன், அதை நான் வாங்கியதில் எனக்கு மிகவும் ஆச்சரியமாக ஏற்ப்பட்டுள்ளது" என்று தெரிவித்துள்ளார்.

இந்த பழைய ஜீன்ஸை விண்டேஜ் ஆடை நிறுவனமாக இருக்கும் டெனிம் டாக்டர்ஸ் உரிமையாளர் ஜிப் ஸ்டீவன்சன் விற்றிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
English Summary
Levis jeans Sold for 62 M