37,000 பேரின் குடியுரிமையை பறித்த குவைத்! இனி "உண்மையான குவைத் குடிமக்களுக்கு மட்டுமே இந்நாடு சொந்தம்" என அறிவிப்பு!
Kuwait citizenship
குவைத் அரசு ஒரே இரவில் அதிரடியாக 37,000 குடியுரிமைகளை ரத்து செய்து பெரும் அதிர்வை ஏற்படுத்தியுள்ளது.
இதனால், பெரும்பாலும் திருமணத்தின் மூலம் குடியுரிமை பெற்ற பெண்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக குவைத் குடிமக்களாக வாழ்ந்தவர்கள், தற்போது நாடற்றவர்களாக மாறியுள்ளனர்.
இந்த நடவடிக்கையை குவைத்தின் புதிய ஆட்சித் தலைவர் எமீர் ஷேக் மெஷால் அல்அஹ்மத் அல்-சபாஹ் மேற்கொண்டுள்ளார். 2023 டிசம்பரில் அதிகாரத்துக்கு வந்த ஐந்து மாதங்களுக்குள், அவர் நாடாளுமன்றத்தை கலைத்து, சில அரசியலமைப்புச் சட்டங்களைச் சாத்தியமான வரை நிறுத்தி வைத்தார்.
இதையடுத்து, "உண்மையான குவைத் குடிமக்களுக்கு மட்டுமே இந்நாடு சொந்தம்" எனக் கூறி, கடந்த காலங்களில் குடியுரிமை பெற்றவர்களை மீளாய்வு செய்து அவர்களது அடையாளங்களை இரத்து செய்யும் நடவடிக்கையை துவக்கியுள்ளார்.
1987 முதல் திருமணத்தின் அடிப்படையில் குடியுரிமை பெற்ற பெண்கள், இரட்டை குடியுரிமை வைத்தவர்கள் மற்றும் போலி ஆவணங்களின் மூலமாக குடியுரிமை பெற்றவர்கள் இந்த புதிய நடவடிக்கையில் அதிகமாக பாதிக்கப்பட்டுள்ளனர்.