அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எடுத்த அதிரடி நடவடிக்கை!  - Seithipunal
Seithipunal


அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு ஆலோசகராக ஜான் பால்டனை பணிநீக்கம் செய்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

ஈரான் மற்றும் வடகொரியா விவகாரத்தில் அதிபர் டொனால்டு டிரம்ப் மீது ஜான் பால்டன் தொடர்ந்து குற்றம் சாட்டிவந்த நிலையில், அந்த நாடுகளுடன் அமெரிக்கா போர் புரிய வேண்டும் என்றும் கூறி வந்தார். ஆனால் பால்டனின் வெளியுறவுக் கொள்கைகள் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்பிற்கு விருப்பமில்லை. இதனால் பாதுகாப்பு ஆலோசகர்  பால்டனுக்கும் அதிபர் டிரம்புக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் உருவானது. 

இந்நிலையில் இது குறித்து டிரம்ப் டுவிட்டரில் ''நான் நேற்று இரவு பாதுகாப்பு ஆலோசகர் ஜான் பால்டனிடன் உங்கள் சேவை இனி வெள்ளை மாளிகைக்கு தேவையில்லை என கூறிவிட்டேன். அவரது ஆலோசனைகள், நிர்வாகத் திறமைகள் பலவற்றை நான் ஏற்கவில்லை. அதனால் அவரை பதவி விலகுமாறு கூறினேன். இதனையடுத்து தனது ராஜினாமா கடிதத்தை பால்டன் இன்று வழங்கியுள்ளார். இதுவரை பால்டன் செய்த சேவைகளுக்கு நன்றி தெரிவித்துக்கொள்கிறேன். மேலும் அமெரிக்காவுக்கான புதிய பாதுகாப்பு ஆலோசகரின் பெயர் அடுத்த வாரம் வெளியிடப்படும்”. என குறிப்பிட்டுள்ளார். 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

John Bolton removed as National Security Advisor for america


கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?



Advertisement

கருத்துக் கணிப்பு

2026 தேர்தல் வரை திமுக கூட்டணி நிலைக்குமா?




Seithipunal
--> -->