டெல்லி காற்று மாசு தாக்கமா...? சோனியா காந்தி கங்காராம் மருத்துவமனையில் அனுமதி...!
due Delhi air pollution Sonia Gandhi admitted Gangaram Hospital
காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவரும், பாராளுமன்ற காங்கிரஸ் குழு தலைவருமான சோனியா காந்தி, உடல்நலக் காரணமாக டெல்லியில் உள்ள புகழ்பெற்ற கங்காராம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த தகவல் அரசியல் வட்டாரங்களில் கவனத்தை ஈர்த்துள்ளது.மருத்துவமனை நிர்வாகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், இது அவசர சிகிச்சை அல்ல என்றும், வழக்கமான மருத்துவ பரிசோதனைக்காகவே அவர் மருத்துவமனைக்கு வந்துள்ளதாகவும் தெளிவுபடுத்தப்பட்டுள்ளது.
சோனியா காந்தியின் உடல்நிலை தற்போது சீராக உள்ளதாகவும், நாள்பட்ட இருமல் பிரச்சினை காரணமாக நுரையீரல் நிபுணர் மருத்துவர்களின் கண்காணிப்பில் இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், டெல்லியில் நிலவி வரும் கடும் காற்று மாசு சூழ்நிலை காரணமாக, அவர் தொடர்ந்து மருத்துவ பரிசோதனைகள் மேற்கொண்டு வருவதாகவும் மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
English Summary
due Delhi air pollution Sonia Gandhi admitted Gangaram Hospital