மாதம் 10 நாள் வேலை.. ரூ. 1.3 கோடி சம்பளம் - வலைத்தளங்களில் வைரலாகும் நோட்டீஸ்.! - Seithipunal
Seithipunal


மாதம் 10 நாள் வேலை.. ரூ. 1.3 கோடி சம்பளம் - வலைத்தளங்களில் வைரலாகும் நோட்டீஸ்.!

ஆஸ்திரேலியாவை சேர்ந்த புளூகிபன் மருத்துவ நிறுவனம் பிரிட்டன் மருத்துவர்களை பணியில் அமர்த்துவதற்காக மிகவும் கவர்ச்சிகர விளம்பரம் ஒன்றை  வெளியிட்டுள்ளது. தற்போது இந்த விளம்பரம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

இந்த விளம்பர பதிவில், "டாக்டர் ஆடம் கே ஃபீலிங் வந்துவிட்டாரா? ஆஸ்திரேலியாவுக்கு வாங்க! பிரிட்டனை சேர்ந்த மருத்துவராக இருக்க வேண்டும். மாதம் 10 நாட்கள் மட்டும் வேலை செய்து, 20 நாட்களுக்கு விடுமுறை எடுத்துக்கொள்ளலாம்." 

"ஆண்டு வருமானம் 2 லட்சத்து 40 ஆயிரம் டாலர்கள், இந்திய மதிப்பில் ரூ. 1.3 கோடி. தங்கும் இடம் வழங்கப்படும். சைன்-இன் போனஸ் தொகையாக ரூ. 2.7 லட்சம் வழங்கப்படும்," என்று பதிவிடப்பட்டுள்ளது.

தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வரும் இந்த விளம்பரம் பிரிடிஷ் மருத்துவ இதழின் வலைதளத்தில் பதிவிடப்பட்டுள்ளது. இந்த விளம்பரத்தை எழுத்தாளர் மற்றும் முன்னாள் மருத்துவ நிபுணர் ஆடம் கே தனது டுவிட்டரில் பகிர்ந்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

job wanted addvertiesment paper viral in social media


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->