பொது இடங்களில் புகை பிடிக்க தடை; ஜப்பானில் புதிய சட்டம்..! - Seithipunal
Seithipunal


உலக புகழ்பெற்ற கண்காட்சிகளில் ஒன்றாக உலக எக்ஸ்போ கண்காட்சி 5 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும். கடந்த 2020-ஆம் ஆண்டு கொரோனா தொற்று பரவலையொட்டி குறித்த  கண்காட்சி ஒத்தி வைக்கப்பட்டது. தொடர்ந்து 2022-ஆம் ஆண்டு துபாயில் கோலாகலமாக நடைபெற்றது.

இந்நிலையில் 2025 உலக எக்ஸ்போ கண்காட்சி ஜப்பானின் ஒசாகா நகரில் நடைபெற இருக்கிறது. இதில் உலக நாடுகள் அனைத்தும் கலந்து கொண்டு அரங்குகளை அமைத்து தங்கள் நாட்டின் பராம்பரியம் மற்றும் பண்பாட்டை காட்சிப்படுத்த உள்ளனர்.

அத்துடன், ஒசாகாவில் உலக எக்ஸ்போ கண்காட்சி 2025-க்கான திட்டப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இந்தநிலையில் ஒசாகாவில் பொது இடங்களில் சிகரெட், இ-சிகரெட் உள்ளிட்ட போதைப்பொருட்களை பயன்படுத்தி புகைப்பிடிக்க அந்த நகர மக்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. 

மேலும் இந்ததாண்டு முழுவதும் குறித்த தடை அமலில் இருக்கும் என்றும் மீறுவோருக்கு அபராதம் விதிக்கப்படும் என உத்தரவிடப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Japan bans smoking in public places


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->