இஸ்ரேல் கொடூர தாக்குதல்.. குழந்தைகள் உள்பட 33 பேர் உயிரிழந்த பரிதாபம்! - Seithipunal
Seithipunal


இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டில் நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுதகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

அக்டோபர் 7ஆம் தேதி. யூதர்களின் பிரதான பண்டிகையான ‘சுக்கோட்’ என்கிற கூடாரப் பண்டிகையின் கடைசி நாள் கொண்டாட்டம் அது. இசை நிகழ்ச்சியில் இஸ்ரேல் மக்கள் லயித்துக் கொண்டிருக்க, வான், தரை மற்றும் கடல் என பல வழிகளில் ஊடுருவிய ஹமாஸ் படையினர் பொதுமக்கள்மீது கடுமையாக தாக்குதல் நடத்தினர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். 

இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக ஹமாஸ் படையினரின் கட்டுப்பாட்டில் இருக்கும் காஸாவின்மீது இஸ்ரேல் படை தாக்குதல் நடத்தியது. அதில் கிட்டத்தட்ட 1,400க்கும் மேற்பட்ட (அக்டோபர் 12 வரை) பொதுமக்கள் கொல்லப்பட்டனர். மேலும் கட்டடங்கள் தகர்க்கப்பட்டதால் 3 லட்சத்துக்கும் அதிகமானோர் தங்கள் இருப்பிடங்களைவிட்டு வெளியேறினர். இஸ்ரேலின் இந்த தாக்குதலால் காஸாவில் 450 குழந்தைகள் கொல்லப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியான. அதேபோல  காஸாவிற்கு செல்லும் மின்சாரம், குடிநீர் போன்ற அனைத்து அடிப்படை வசதிகளையும் துண்டித்திருக்கிறது இஸ்ரேல். ஹமாஸ் அமைப்பினரை அழித்து ஒழிக்கும்வரை நாங்கள் ஓயமாட்டோம் என்று இஸ்ரேல் சூளுரைத்திருக்கிறது. இந்தப் போரில் அமெரிக்கா, இந்தியா உட்பட பெரும்பாலான பெரிய நாடுகள் இஸ்ரேல் பக்கம் நிற்கின்றன.

இந்நிலையில் காசா முனையில் இஸ்ரேல் தொடர் தாக்குதல் நடத்தி வருகிறது. அந்த வகையில், வடக்கில் இருந்து இடம்பெயர்ந்தவர்கள் தங்கியிருந்த வீட்டில் நேற்றிரவு இஸ்ரேல் நடத்திய தாக்குதலில் 33 பேர் உயிரிழந்ததாக பாலஸ்தீன சுதகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். இதில் பெரும்பாலானோர் குழந்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.

இஸ்ரேல் மற்றும் லெபனான் ஹிஸ்புல்லா இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டிய நிலையிலும், இஸ்ரேல் ஹமாஸ் இடையிலான போர் முடிவுக்கு வரவில்லை. தற்போதைய அமெரிக்க அரசு மற்றும் புதிதாக ஆட்சி அமைக்க இருக்கும் அமெரிக்க நிர்வாகங்கள் அடுத்த ஆண்டு ஜனவரியில் புதிய அமெரிக்க அதிபர் பதவியேற்கும் முன் போரை முடிவுக்கு கொண்டுவர நம்பிக்கை தெரிவித்துள்ளன.

எனினும், இது தொடர்பான போர் நிறுத்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து முடங்கி வருகின்றன. சமீபத்திய தாக்குதலை மருத்துவமனையின் அருகாமையில் இருந்த ஹமாஸ் அமைப்பினரை குறிவைத்து நடத்தியதாக இஸ்ரேல் ராணுவம் தெரிவித்துள்ளது.

பொதுமக்களுக்கு தீங்கு விளைவிப்பதைத் தவிர்க்க முயற்சிப்பதாக இராணுவம் கூறுகிறது. ஹமாஸ் அமைப்பினர் மக்கள் மத்தியில் மறைந்திருப்பதாக குற்றம் சாட்டுகிறது. இதனால் அவர்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Israel's horrific attack At least 33 people including children were killed


கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?



Advertisement

கருத்துக் கணிப்பு

2024-ல் சிறந்த எதிர்க்கட்சியாக செயல்பட்ட கட்சி எது?




Seithipunal
--> -->