ஈரானுக்கு எதிரான போர்: ஒருநாளுக்கு ரூ. 8,659 கோடி செலவு செய்யும் இஸ்ரேல்: அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ள நிதி ஆலோசகர்..! - Seithipunal
Seithipunal


இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையே கடந்த ஒரு வார காலமாக போர் நடந்து வருகிறது. இரு நாடுகளும் மாறி மாறி குண்டுத்தாக்குதல், ஏவுகணை தாக்குதல்களை மேற்கொண்டு வருகிறது. இதனால் பல பலியாகியுள்ளதோடு, ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர். 

இந்நிலையில், இந்த போரில் ஈரானுக்கு எதிராக நடத்தி வரும் தாக்குதலுக்கு இஸ்ரேல் நாள்தோறும் செலவிடும் தொகை குறித்த செய்தி வெளியாகியுள்ளது. ஈரான், இஸ்ரேல் நாடுகள் இடையேயான போர் இன்னமும் நிறுத்தப்படாத நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கும் சூழல் உருவாகியுள்ளது.

இரு நாடுகளுக்கிடையில், போர் தீவிரம் அடைந்து வரும் நிலையில், போருக்காக அந்நாடு மேற்கொண்டு செலவு குறித்த விவரங்கள் தற்போது வெளியாகியுள்ளன. அதாவது, இஸ்ரேலின் நிதி இழப்பானது, தாங்க முடியாத அளவுக்கு சென்று விட்டதாக அந்நாட்டின் பாதுகாப்பு படைகளின் தலைமை தளபதியின் முன்னாள் நிதி ஆலோசகர் ரீம் அமினாச் கூறியுள்ளார்.

இது குறித்து அவர் மேலும் கூறியதாவது;

இப்போது ஒரு நாளைக்கு கிட்டத்தட்ட 01 பில்லியன் டாலர் (இந்திய ரூபாய் மதிப்பில் ரூ.8,659 கோடி) செலவாகிறது என்றும், இவை அனைத்தும் ராணுவ நடவடிக்கைகளுக்காக செலவிடப்படுவதக்கவும், முதல் 48 மணி நேர போருக்கு மட்டும் ரூ.12,035 கோடி செலவு ஆகிறதாக அதிர்ச்சி தகவலை கூறியுள்ளார்.

அத்துடன், வான்வழி தாக்குதல்கள், வெடிமருந்துகள், போர் விமானங்களுக்கு ஆன செலவு தனி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த செலவுகள் அனைத்தும் நேரடியான செலவினங்கள் எனவும், பொதுமக்களின் உட்கட்டமைப்பு சேதமானது, உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள பாதிப்பு கணக்கில் சேர்க்கவில்லை என்றும் சுட்டிக்காட்டியுள்ளார். அதாவது, இவை எல்லாம் மறைமுக செலவினங்கள் என்பதால் முழுமையாக மதிப்பிட முடியாது என்று பகீர் தகவலை அவர் வெளியிட்டுள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israel spending Rs 8659 crore per day on war against Iran


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->