எகிப்து உடனான காசாவின் முக்கிய ரஃபா எல்லை நாளை முதல் திறந்துவிடும் இஸ்ரேலிய ராணுவ அமைப்பு..!
Israel is opening the Gaza border with Egypt starting tomorrow
இஸ்ரேல்- ஹமாஸ் இடையிலான போர் காரணமாக கடந்த 2024-ஆம் ஆண்டு எகிப்து உடனான காசாவின் முக்கிய எல்லையை இஸ்ரேல் மூடியது. இந்நிலையில் நாளை முதல் இந்த ரஃபா எல்லை திறக்கப்படும் என காசாவிற்கு வழங்கப்படும் உதவிகளை ஒருங்கிணைக்கும் பொறுப்பில் உள்ள இஸ்ரேலிய இராணுவ அமைப்பான 'கோகாட்' தெரிவித்துள்ளது.
இருப்பினும், மக்களின் வரையறுக்கப்பட்ட நடமாட்டத்திற்கு மட்டுமே அனுமதிக்கப்படுவதாகவே கூறப்படுகிறது. அத்துடன், இந்த ரஃபா எல்லை மீண்டும் திறக்கப்படுவது டிரம்பின் காசாவின் போர் நிறுத்தத் திட்டத்திற்கான முக்கிய முன்னெடுப்பாக கருதப்படுகிறது.
ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைக் காவல்படை அதிகாரிகளால் கண்காணிக்கப்படும் இந்த ரஃபா எல்லைப் பகுதியாக வெளியேறும் மற்றும் நுழையும் நபர்களை இஸ்ரேலும் எகிப்தும் சரிபார்த்த பின்பே அனுப்பும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் காசாவில் இருந்து வெளியேறிய பாலஸ்தீனர்கள் இஸ்ரேலின் பாதுகாப்பு அனுமதி பெற்று மீண்டும் காசா திரும்ப அனுமதிக்கப்படுவார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
English Summary
Israel is opening the Gaza border with Egypt starting tomorrow