'பதற்றத்தை தீர்க்க தயாராக இருக்கிறோம்; ஆனால், அமெரிக்காவுடன் எந்த பேச்சு வார்த்தைகளுக்கும் திட்டமிடப்படவில்லை'; ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர்..!
The Iranian Foreign Minister says there is no plan for any negotiations with the United States
ஈரானில் டாலருக்கு நிகரான பண மதிப்பு கடும் வீழ்ச்சி அடைந்ததால், அந்நாட்டில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ள நிலையில், ஆகிடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இதனால் பொதுமக்கள் சாலையில் இறங்கி போராடத் தொடங்கினர்.
இவ்வாறு போராட்டத்தில் ஈடுபட்டவர்களை ஒடுக்க ஈரான் அரசு நடவடிக்கை எடுத்த நிலையில், போராட்டக்காரர்களுக்கும் பாதுகாப்புப்புடையினருக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. இந்த போராட்டம் வன்முறையாக வெடித்ததில், 06 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.

ஈரான் அரசு, போராட்டக்காரர்கள் மீது கொடூர தாக்குதல் நடத்தினால், ஈரான் மீது ராணுவ நடவடிக்கை எடுப்போம் என அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் எச்சரிக்கை விடுத்து இருந்ததோடு, போர்க்கப்பல்களை ஈரான் நோக்கி நகர்த்த உத்தர விட்டார்.
இந்த சூழலில் அமெரிக்க போர்க்கப்பல்களும் முன்னோக்கி வருகின்றமையால், இதனால் ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தலாம் என்ற அச்சம் நிலவுகிறது. இதனையடுத்து ஈரான்- அமெரிக்கா இடையிலான பதற்றத்தை தணிக்க துருக்கி முயற்சி மேற்கொண்டு வருகிறது. இது தொடர்பாக துருக்கி அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்த ஈரான் வெளியுறவுத்துறை அமைச்சர் அப்பாஸ் அராக்சி இஸ்தான்புல் சென்றுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில் "நாங்கள் நியாயமான மற்றும் சமமான பேச்சுவார்த்தைகளுக்கு தயாராக இருக்கிறோம் என்றும், இந்த பேச்சுவார்த்தைகளுக்கு முதலில் பேச்சுவார்த்தைகளின் வடிவம், பேச்சுவார்த்தைகள் நடைபெறும் இடம் மற்றும் பேச்சுவார்த்தைகளின் தலைப்பு ஆகிய அனைத்தையும் குறித்து ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும் என்றும், ஈரான் பேச்சுவார்த்தைக்கு தயாராக இருப்பதுபோன்று போருக்கும் தயாராக உள்ளது என்று கூறியுள்ளார்.
அத்துடன், பதற்றத்தை தீர்க்க பேச்சுவார்த்தைக்கு தயாராக இருக்கிறோம். ஆனால், அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தைக்காக எந்தவொரு திடமான திட்டமும் இல்லை என்று அப்பாஸ் அராக்சி, குறிப்பிட்டுள்ளார்.
English Summary
The Iranian Foreign Minister says there is no plan for any negotiations with the United States